“ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படும் வெள்ளாடு மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். 

மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

யார் யாரெல்லாம் தொடங்கலாம்?

நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.

மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்

நன்மைகள்

1.. ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.

2.. குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்

3.. வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.

4.. ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.

5.. அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது

6.. நல்ல எரு கிடைக்கிறது.

7.. வருடம் முழுவதும் வேலை