கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும்போது இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்...
ஆண்மை நீக்கம்
** பொதுவாக 8-10 வாரங்களான செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளை ஆண்மை நீக்கம் செய்தல் வேண்டும். அப்போதுதான் அவற்றைக் கையாள்வது எளிது
** இதனை ஒரு மருத்துவர் உதவியின்றி நாமாக செய்தல் தவறு.
** செம்மறிக் குட்டிகளை 6 மாத்திற்குள் இறைச்சத்து விற்பதாக இருந்தால் ஆண்மை நீக்கம் அவசியமில்லை. ஆனால் அவற்றை 4 மாதத்திலிருந்து பெண் குட்டிகளுடன் இல்லாமல் தனியே வைத்தல் வேண்டும்.
** ஆண்மை நீக்கம் செய்யும்போது வலி அதிகமாக இருக்கும். செய்யத் தெரிந்தால் மட்டுமே நாமாக செய்தல் வேண்டும்.
** மருத்துவர் உதவியுடன் வலிகுறைப்பான் மயக்க மருந்து கொடுத்த பின்பு செய்தலே சாலச்சிறந்தது. ஆனால் விவசாயிகள் இதை ஒரு சுமையாகக் கருதுகின்றனர்.
** 6 வாரங்களான செம்மறிக்குட்டி, கன்றுகளுக்கு இதைச் செய்யும்போது அதன் ஆண்குறியில் ஒரு இரப்பரை மாட்டி இரத்தம் வீணாவதைத் தடுக்க வேண்டும்.
** ஒவ்வொரு கன்றிற்கும் செய்யும்போது உபகரணங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
** டெட்டானஸ் போன்ற நோய்ப்பரவலைத் தடுக்க தகுந்த தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட்டிருக்க வேண்டும்.
** வயதான கால்நடைகளில் ஆண்மை நீக்கம் செய்வது சிரமமான ஒன்றாகும்