வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனம் 

வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் என்று குறிப்பிட்டேன். நமது பகுதி ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன. (பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும்.

எனவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.

1.. காய்வு நிலையில்

பசுந்தழை / புல் 3 கிலோ காய்வு நிலையில்           0.75 கிலோ

உலர் தீவனம் 300 கிராம் காய்வு நிலையில்          0.25 கிலோ

கலப்புத் தீவனம் 250 கிராம்  காய்வு நிலையில்    0.24 கிலோ

மொத்தம்   1.24 கிலோ

2.. புளியங்கொட்டை

இது சிறந்த ஆட்டுத் தீவனம். தோல் நீக்கி, அரைத்துத் தீவனமாகக் கொடுக்கலாம். வீட்டில் உள்ள புளியங்கொட்டையை மலிவான விலைக்கு விற்றுவிட்டு, அதிக விலையில் ஆட்டுத் தீவனம் வாங்குவது சரியில்ல.

3.. வேலிக் கருவை நெற்றுகள்

இதுவும் தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம். இதில் 15 / 25% சர்க்கரைப் பொருள் உள்ளதால், தினம் 100 / 200 கிராம் மட்டுமே கொடுக்கலாம். சாமானியர்கள் இந்நெற்றுகளை சேகரித்து வைத்து சிறிது சிறிதாகத் தீவனமாக அளிக்கலாம்.

4.. எள்ளு பிண்ணாக்கு

இதுவும் சிறந்த பிண்ணாக்கு. கறவை மாடுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளாடுகளுக்கும் ஏற்றது.