உலர் தீவனத்தை வெள்ளாடுகளுக்கு கொடுப்பதன் அவசியம் என்ன?
வெள்ளாடுகளுக்கு உலர் தீவன கொடுப்பதன் அவசியம்:
பொதுவாக அசைபோடும் கால்நடைகள், சிறப்பாக வெள்ளாடுகள் பசுந்தீவனத்தை மட்டும் உண்டு அவற்றின் முழுத் தீவனத் தேவையையும் நிறைவு செய்துவிட முடியாது போகலாம். முக்கியமாக அவற்றிற்குத் தேவைப்படும் அளவு காய்வு நிலைத் தீவனத் தேவை (DRY MATTER) அடைய முடியாது போகும்.
ஆகவே, அவற்றின் பசி அடங்காது. வயிறு நிறையத் தீவனத்தைத் தின்றுவிட்டு, அதற்கு மேல் தின்ன முடியாது இருக்கும் வெள்ளாடுகள் இரவில் பசியால் துன்புறும். காரணம், பசுந்தீவனம் பெரு வயிற்றின் இடத்தை அடைத்துக் கொள்ளும்.
ஆகவே மாடுகளுக்கு இரவில் சிறிதளவு காய்ந்த தீவனம் அரைக்கிலோ கொடுக்கலாம் அல்லது பகல் வேளையில் பாதியும் இரவில் பாதியுமாகக் கொடுக்கலாம்.
1.. வேர்க்கடலைக் கொடி
கடலைக்கொடி, கடலை பயிரிடும் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், ஆடு மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுவும் ஒரு சிறப்பு காய்ந்த தீவனமாகும். பயிரில் சிவப்புக் கம்பளிப் புழு தாக்குதல், கடலை உற்பத்தியைப் பாதிப்பதுடன், ஆடுகளுக்குப் பெருந் தீவனப் பஞ்சத்தை உண்டாக்குகின்றது.
2.. துவரை இலை
தற்போது துவரம்பருப்புடன் சத்துமிகு தழை வழங்கும் மாத்துவரை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில் புன்செயில், துவரை பல பகுதிகளில் பயிரிடப்படுகின்றன.
பயிர் விளைந்து துவரையை வெட்டித் துவரைப் பருப்பைப் பிரிக்கும்போது, உதிரும் இலை, நெற்றுக் கூடுகளை ஆடுகளுக்குத் தீவனமாக சேர்த்து வைக்கலாம். இந்த தவிரப் பருத்திச் சாகுபடிப் பகுதிகளில் பருத்தி இலைகளையும், சேகரித்துத் தீவனமாக அளிக்கலாம்.
இது போன்றே மொச்சை, அவரைச் செடிகளில் உதிர்ந்த இகைளை வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.