கரும்பு நடவுக்கு முன்பு நோய் இல்லாத கரணைகளைத் தேர்வு செய்து நட வேண்டும். செவ்வழுகல் நோய் தொடர்ந்து வரக்கூடிய நிலங்களாக இருப்பின் ஒரு முறை கரும்பு பயிர் செய்த பிறகு, மறுபயிராக நெல் பயிர் செய்த பின் மறுபடியும் கரும்பு பயிர் செய்யலாம்.

நடவு செய்யும் முன் 500 கிராம் பாவிஸ்டின் என்ற பூஞ்சாள மருந்து மற்றும் ஒரு கிலோ யூரியா ஆகியவற்றை ஒரு தொட்டியில் நீரில் கரைத்து வைத்துக்கொண்டு கரணைகளை 5 நிமிடம் ஊறவைத்துப் பிறகு நடவு செய்ய வேண்டும்.

நட்ட பிறகு ஒரு மாதத்திற்கு ஒரு முறை காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2 1/2 கிராம் என்ற அளவில் கரைத்து கரும்புத் தூர்களில் ஊற்றிவிடவும். செவ்வழுகல் நோயைக் கட்டுப்படுத்தி விடலாம்.