பொலி கிடாக்களை இந்த முறையில் தேர்வு செய்வதுதான் சரி...
பொலி கிடாக்கள் தேர்வு செய்யும் முறை
** விவசாயிகள் புதிய பண்ணை தொடங்கும் போது கிடாக்களை வேறு பண்ணைகளில் இருந்தோ அல்லது சந்தையில் இருந்தோ வாங்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் குட்டிகள் நோயினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது.
** அதேபோல தேர்ந்தெடுக்கும் கிடாக்கள் காய்ச்சல், நுரையீரல் நோய்கள், வயிற்று உப்புசம், கண்வலி, வாய்ப்புண், கால்புண் மற்றும் இனப்பெருக்க உறுப்பு போன்ற நோய் அறிகுறிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
** ஆண் தன்மை, பிரகாசமான கண்கள் மற்றும் ஆரோக்கிமான தோல் உடைய ஆடுகளை வாங்க வேண்டும். பொலி கிடாக்களை வாங்கும் பொழுது தரமான இனப்பெருக்க உறுப்புகள் உள்ளவற்றை வாங்க வேண்டும்.
** பொதுவாக, கிடாக்களில் நன்றாக வளர்ச்சியடைந்த இரண்டு விரைகளும் ஒரே அளவில் இருக்கும்படியான ஆடுகளை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு விரைகளும் விரைப்பையில் இறங்காத ஆடுகளை தவிர்க்க வேண்டும்.
** ஆடுகளில் விதைப்பையின் சுற்றளவு 25 முதல் 35 செ.மீ இருக்க வேண்டும். கால்கள் மற்றும் பாதங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும். விவசாயிகள் சொந்த பண்ணையில் உள்ள ஆடுகளின் இனத்திற்கு ஏற்ப ஒரே இனத்தை சேர்ந்த வயது வந்த கிடாக்களையே தேர்வு செய்ய வேண்டும்.
** பொதுவாக, 8 முதல் 10 வயதுடைய கிடாக்கள் சினைக்கு விடத் தகுதியானவை. ஆனால், ஒரு ஆண்டு வயதுடைய ஆடுகளை சினைக்கு அனுமதிக்கலாம். ஆடுகளை சினைக்கு 6 வயது வரை பயன்படுத்தலாம்.
** இனப்பெருக்கத்திற்கு தேவையான கிடாக்களை அவை குட்டிகளாக இருக்கும் பொழுது தேர்வு செய்வதுடன், தாயிடம் இருந்து பிரித்த பிறகு 3 மாத எடையின் படி அதிக எடை உடைய குட்டிகளை தேர்வு செய்யலாம்.