1.. விவசாயத்தில் நீர் பயன்பாடு மற்றும் பாசன முறைகள்.

விவசாயத்தில் நீரின் பயன்பாடு அதிகமாக தேவைப்பட்ட நிலையில் மக்களை இன்றளவும் காத்து வருவது இந்த பாசன முறைகள்.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நாம் அதிக ஆழத்தில் இருந்து நீரை உறிஞ்சி எடுத்தாலும் அவற்றை சில பாசன முறைகள் மூலம் பயிர்களுக்கு கொடுப்பதால் இன்னும் இயங்கிக்கொண்டு இருக்கிறோம்.

நேரடி பாசனம் விட்டு நாம் தெளிப்பு நீர், சொட்டு நீர் என மற்ற வழிகளை கடைபிடிப்பதில் முனைப்புடன் இருப்பதால் இவளவு பஞ்சத்திலும் நாம் விவசாயம் செய்ய முடிகிறது.

2. சிக்கன முறைகள்.

மண்ணின் தன்மை, சீதோஷன நிலை, காற்றின் வேகம் இவற்றை எல்லாம் கனக்க்கிட்டு பயிர்களுக்கு தேவையான நீரை மட்டும் கொடுக்கும் அளவுக்கு நமது விஞ்ஞான வளர்ச்சி உதவுகிறது.

மேலும் ஒவ்வொரு பயிருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவை என்பதையும் நாம் துல்லியமாக கணக்கிடுகிறோம்.

பாசனம் அதிகாலையிலோ அல்லது மாலையிலோ செய்யும் போது நீர் சிக்கனம் ஆகிறது.

தெளிப்பு நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், மூடாக்கு போன்ற சில யுக்திகளை கையாளும் போது நாம் பாசனத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கிறோம்.

3.. மழை நீர் சேகரிப்பு முறைகள்.

மழை நீரை நாம் பல வழிகளில் சேமிக்கலாம்.

சிறு ஓடைகளில் குறுக்கே தடுப்பனைகள் கட்டி மழை நீரை சேமிக்கலாம்.

மேட்டு பகுதியில் இருந்த வரும் நீரை கிணற்றிற்கு முன்பாகவே ஒரு குழி எடுத்து அதில் தேக்கி வைப்பதன் மூலம் நிலத்தடி நீரை நாம் உயர்த்தலாம்.

பாய்ச்சும் நீர் ஆவியாவதை தடுப்பதன் மூலம் நீரை சேமிக்கலாம்.

தற்சமயம் நிறைய ஆழ்துளை கிணறுகள் நீரின்றி இருப்பதால் நீரை அதனுள் விட்டு நிலத்தடி நீரை உயர்தலாம்.

4.. நீர் மாசுபடுதலை தவிர்க்கும் முறைகள்.

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று 1000 வருடங்களுக்கு முன் சொல்லி சென்று இருந்தாலும் நாம் ஒழுக்கம் தவறி நடப்பதால் 50% நீர் மாசுபடுகிறது.

என்னதான் மாசு கட்டுப்பாடு வாரியம் இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் நீரை மாசுபடுத்தும் போது நம்மை போன்ற ஒரு மனிதனையும் பாதிக்கிறது என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

தொழிற்சாலைகள் சரியான கட்டுப்பாடு முறைகளை பின்பற்ற வேண்டும்.

விவசாயிகள் பூச்சிக்கொல்லி, களை கொல்லி, ரசாயன உரங்களை தவிர்க்கவேண்டும். ஒவ்வொருவரும் தமது குடியிருப்புகளில் மாசு கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்கவேண்டும்.

5.. நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் முறைகள்.

மேலே சொன்ன மழை நீர் சேகரிப்பு முறைகளை சரிவர கடைபிடித்து வந்தால் நமது நிலத்தடி நீர் தானாக உயரும். மேலும் நாம் நீரை சிக்கனமாக பயன்படுத்த நிலத்தடி நீர் உயரும்