இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகள் உண்டு…
1.. செடிகளுக்கு இயற்கை உரங்களை இடும்போது அவற்றின் எடை, விளைச்சலின் அளவு மற்றும் புரத உள்ளடக்கம் ஆகியவை அதிகரிக்கும்.
2.. செடிகளில் தீமை செய்கிற நைட்ரேட் எச்சங்களின் அளவு மிகவும் குறையும்.
3.. செயற்கை ரசாயன உரங்கள் ஊட்டி வளர்க்கப்பட்ட செடிகளில் உட்கவரப்படாத நைட்ரேட் சத்துகள் அதிக அளவில் போய்த் தேங்கி விடுகின்றன. இதனால் செடிகள் நச்சுத் தன்மை வாய்ந்ததாக மாறும்.
4.. ஆமணக்குப் பிண்ணாக்கை ஒரு பாத்தியில் உள்ள செடிகளுக்கு இட்டு அதே அளவான இன்னொரு பாத்தியிலுள்ள செடிகளுக்கு அதே அளவு நைட்ரஜன் சத்தைத் தருகிற அளவிலான அம்மோனியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் ஆகிய ரசாயன உரங்களைப் போட்டுப் பாருங்கள்.
5.. இயற்கை உரத்தை உண்டு வளர்ந்த செடிகளில் இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமான நைட்ரேட் எச்சங்கள் செயற்கை உரமிடப்பட்ட செடிகளின் இலைகளில் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
6.. நைட்ரேட் எச்சங்கள் இலைகளில் நச்சுத் தன்மையை தான் தரும். ஆனால், இயற்கை உரங்கள் செடிகளுக்கு புரதத்தை தந்து நன்றாக செழிக்க செய்யும்.