Asianet News TamilAsianet News Tamil

தென்னையை அதிகம் தாக்கும் இரண்டு நோய்களும், கட்டுப்படுத்தும் முறைகளும்…

Two diseases that affect the cinnamon and control of coca
two diseases-that-affect-the-cinnamon-and-control-of-co
Author
First Published May 1, 2017, 12:34 PM IST


தென்னையை அதிகம் தாக்கும் நோய்கள் இரண்டு

1.. வாடல்நோய்

2.. சாறுவடிதல் நோய்

தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள்

1.. குரும்பை உதிரும்,

2.. குறுத்து மட்டை பலமின்றி தொங்கும்.

எப்படி பரவும்:

இந்நோய்கள் பெரும்பாலும் தண்ணீர் மூலமாகவே பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

1.. மரத்தைச் சுற்றிலும் வட்டப்பாத்தி அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

2.. மாதம் ஒரு முறை மரத்தை கண்காணித்து பாதிப்பு இருந்தால் காலிக்சின் 2% மருந்தை வேர் மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு மருந்தினை 4 மாதத்திற்கு ஒரு முறை செலுத்துதல் வேண்டும்.

3.. மருந்து செலுத்திய தேதியிலிருந்து 45-50 நாட்கள் தேங்காய் மற்றும் இளநீர் பறித்து பயன்படுத்துதல் கூடாது.

4.. நோய் பாதித்த மரத்திலிருந்து 3 அடி தூரம் தள்ளி மரத்தின் வேர் மற்ற மரத்திற்கு செல்லாமல் இருக்க ஒரு அடி ஆழம், அகலத்தில் குழிஎடுத்து வேரினை துண்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நோய் பாதித்த மரத்தின் வேர் மூலமாக மற்ற மரங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

5.. மேலும் வாழையினையும் ஊடுபயிராக செய்வதாலும் இந்நோயினை கட்டுப்படுத்த இயலும்.

Follow Us:
Download App:
  • android
  • ios