ஆட்டுப்பண்ணை தொடங்க நினைப்பவர்கள் இந்த முக்கிய விபரங்களை தெரிந்து வைத்துகொள்ள வேண்டும்...

** ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண் ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.

** ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.

** பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயி ரிட வேண்டும்.

** உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க் கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.

** நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

** குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவ னம் செலுத்த வேண்டும்.

** நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத் தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.