மஞ்சள் சாகுபடி செய்வதற்கு முன்...

சமச்சீரான ஊட்டம் தரும்வகையில் பலபயிர் சாகுபடி செய்ய வேண்டும். மஞ்சள் நடவுக்கு 60 நாட்களுக்கு முன்பு பலவகைப் பயிர்களை விதைக்க வேண்டும். கடைசி உழவில் விதைத்து பார் கட்டி உழ வேண்டும். இதனால் நீர் பாய்ச்ச எளிதாக இருக்கும்.

அ) தானியங்களில் ஏதாவது 4 வகை – சோளம், கேழ்வரகு, தினை, கம்பு போன்றவை

ஆ) பயிறுகளில் ஏதாவது 4 வகை – உளுந்து, தட்டை, பாசி, மொச்சை, கொண்டைக் கடலை போன்றவை

இ) எண்ணெய் வித்துகளில் ஏதாவது 4 வகை – ஆமணக்கு, எள், சூரியகாந்தி, சோயா, கடலை போன்றவை

ஈ) மணப்பயிர்களில் ஏதாவது 4 வகை – கடுகு, கொத்தமல்லி, மிளகாய், சோம்பு போன்றவை

உ)  தழையுரப் பயிர்களில் ஏதாவது 4 வகை – சணப்பு, கொள்ளு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, கொழுஞ்சி போன்றவைமேலே கூறியவற்றில் ஒவ்வொன்றிலும் 4 வகைகளையும் கலந்து மொத்தமாக 20-25 கிலோ விதைகளை ஒரே சீராக கடைசி உழவின்போது விதைக்க வேண்டும். 

ஒரு மாதத்தில் இவை நன்கு வளந்துவிடும். பின்னர் கீழ்க்கண்ட பயனுள்ள நுண்ணுயிர்களை தனியாகத் தயார் செய்ய வேண்டும்.

டிரைகோடர்மாவிர்டி – 2 கிலோஅஸோஸ்பைரில்லம் – 2 கிலோபாஸ்போபாக்டிரியம் – 2 கிலோசூடாமோனஸ் – 2 கிலோபைசிலோமைசிஸ்இவற்றை 50 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்து பலவகைப் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும்போது நிலத்தில் தூவிவிடவேண்டும். 

நுண்ணுயிர்களின் மேல் நேரடி வெயில்படக்கூடாது.பலவகைப் பயிர்கள் பயிரிட்ட இரண்டு மாதத்தில் ரோட்டோவேட்டர் கருவி மூலம் மடக்கி உழ வேண்டும். இதன்மூலம் ஏக்கருக்கு 25-35 டன் பசுந்தாழ் உரம் கிடைக்கும். 

எல்லாப் பயிர்களும் நிலத்தில் மக்கிவிடும். மண்புழு மற்றும் நுண்ணுயிர்கள் இவற்றை உட்கொண்டு நிலத்தின் தன்மையை வெகுவாக மாற்றும். பின்னர் நிலத்தை ஒன்றரை அடிப் பார்களாக அமைத்து மஞ்சள் நடவு செய்ய முனைய வேண்டும். 

மே முதல் சூன் இரண்டாம் வாரத்திற்குள் மஞ்சள் நடவு செய்யலாம். நடவுக்கு முன்பு முன்னர் சொன்ன கரைசலில் விதையை நேர்த்தி செய்து வரிசைக்கு வரிசை 1முதல் 1.5 அடி செடிக்குச் செடி 9 அங்குலம் இடைவெளியுடன் மஞ்சளை பாரின் ஓரததில் நடவு செய்ய வேண்டும். 

உடன் நீர் பாய்ச்சுவது அவசியம். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். மழை இருந்தால் பாசனம் தேவையில்லை.