தண்டு துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தும் அடைப்பான் மருந்தை மாவு பதத்திற்கு தயாரிக்கும் முறை...

** அடைப்பான் மருந்து 250 கிராமை 100 மி.லி. தண்ணிரில் கலந்து மாவு பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.

** இதனை சிறுசிறு உருண்டைகளாக்கி பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள துளைகளில் நிரப்ப வேண்டும்.

** கார்பன்டசிம் 1 கிராம் மற்றும் யூரியா 10 கிராம் / லிட்டர் கலவையை மரத்தை சுற்றிலும் ஊற்ற வேண்டும்.

** மரத்திற்கு தொடர்ச்சியாக தண்ணிர் ஊற்றுதல் வேண்டும். மானாவாரியாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணிர் ஊற்றுதல் வேண்டும்.

அடைப்பான் மருந்தை குழம்பு பதத்திற்கு தயாரிக்கும் முறை...

** அடைப்பான் மருந்து 750 கிராமை 750 மி.லி. தண்ணீரில் கலக்க வேண்டும்

** அடைப்பான் மருந்தை தூரிகைகள் கொண்டு மரத்தைச் சுற்றி பூசும் பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.

** இதனுடன் 40 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தைக் கலக்க வேண்டும். இது பாதிக்கப்பட்ட பகுதியில் புழுக்கள் உயிருடன் இருக்கின்றனவா என்பதை பார்க்க உதவும்.

** பாதிக்கப்பட்ட திசுக்கள் இருப்பின் மேற்காணும் முறையினை பயன்படுத்தி இடைவெளி இல்லாமல் அடைப்பான் மருந்தை பூசவேண்டும்.

** மருந்து தடவிய இடங்களில் பிசின் போன்ற திரவம் வடிந்தால் அச்சம்வேண்டாம். இது உள்ளே திசுக்கள் குணமாவதற்கான அறிகுறியாகும்.