வெள்ளாடு வளர்ப்புக்கு பெட்டை ஆடுகளை தேர்வு செய்ய இந்த முறை உதவும்...

This method helps to choose the goats for goat farming.
This method helps to choose the goats for goat farming.


பெட்டை ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்

மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது

தலை குறுகியதாகவும், கழுத்து மெலிந்தும், உடல் நீளமாகவும் இருக்க வேண்டும்.

நன்கு வளர்ச்சியடைந்த, மிருதுவான மடி உடலுடன் நன்கு ஒட்டியிருக்க வேண்டும்.

மிருதுவான மற்றும் பால் கறந்தவுடன் சுருங்கக்கூடிய பால் காம்புகளாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட காம்புகள் உள்ள ஆடுகளை வாங்கக்கூடாது.

முதுகுப்புறமும், பின்பகுதியும் அகன்று விரிந்து இருக்கும் ஆடுகளை வாங்க வேண்டும்.

நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். 

சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது

மேற்கண்ட குணங்களுடன், பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடைந்திருக்க வேண்டும்.

ஒரு ஈற்றில் 2  ஈனும் ஆடுகளின் குட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை குட்டிகளை 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும்

30-35 சதவீத குட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios