வேரழுகல் நூற்புழு கனகாம்பரம் பூவை தாக்காமலிருக்க இதுதான் வழி...
கனகாம்பரம்
கனகாம்பரம் பயிரை தாக்கும் நூற்புழுக்களில் முக்கியமானவை வேரழுகல் நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு மற்றும் ஊசி நூற்புழு போன்றவைகளாகும்.
வேரழுகல் நூற்புழு
** தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும், இலைகள் இளஞ்சிவப்பிலிருந்து கருஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ மாறி மேல் நோக்கி சுருண்டு காணப்படும்.
** பூக்கள் சிறுத்துக் காணப்படும். வேரின் வளர்ச்சி குன்றியும், கருப்பு நிறமாகி அழுகியும் காணப்படும். மலர்களின் மகசூல் குறைவாகவும், தரமற்றதாகவும் இருக்கும்.
** இந்த வேரழுகல் நூற்புழு பியூசேரியம் சொலானி எனும் பூசணத்துடன் சேர்ந்து செடியைத் தாக்குவதால் ஏற்படும் விளைவுகளே தமிழ்நாட்டில் கனகாம்பர பயிர் வளர்ச்சி குறைந்து வருவதற்கு காரணம். இதனால் பாதிக்கப்பட்ட வேர்பகுதியில் பியூசேரியம் சொலானி, பியூசேரியம் ஆக்ஸிஸ்போரம் என்னும் பூசணங்களும் காணப்படுகின்றன.
** தொழு உரத்தை இடுவதாலும், சாமந்தி வகைப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவதாலும், நூற்புழுவை குறைக்க முடியும். கார்போபியூரான் செடிக்கு ஒரு கிராம் வீதமோ அல்லது நாற்றங்காலில் ஒரு சதுர மீட்டருக்கு 6 கிராம் வீதமோ இடுவதன் மூலம் நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.
** பயிர்களில் ஒரு எக்டருக்கு 33 கிலோ என்ற வீதத்தில் இடுவதன் மூலம் நூற்புழுக்களை கட்டுப்படுத்த முடியும்.