அடைப்பான் மருந்தை இப்படிதான் பயன்படுத்தணும்; அப்போதுதான் மா மரங்களை தாக்கும் பூச்சியை ஒழிக்கலாம்...
தண்டு துளைப்பான் பூச்சியை ஒழிக்கும் அடைப்பான் மருந்தை பயன்படுத்தும் முறை...
** மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் வேகமாக மரங்கள் காய்ந்தால், அரிவாள் (அ) கோடாரி கொண்டு பாதிக்கப்படாத திசுக்கள் தெரியும் வரை நீக்குதல் வேண்டும்.
** பாதிக்கப்பட்ட மரத்தில் பெரிய வெட்டுக்காயம் எதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
** மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மரத்துகள்கள், வண்டின் எச்சம் மற்றும் பிசின் போன்றவற்றை கத்தியை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
** உள்ளிருக்கும் புழுக்களை அழிக்க வேண்டும். இவ்விடங்களில் புழுக்களை அழிக்க டைக்குளோர்வாஸ் 5 மி.லி./லி. என்றளவில் பயன்படுத்தலாம்.
** மரத்தின் அடிப்பகுதியிலுள்ள கிளைகள் மற்றும் இதரப் பொருட்களை அகற்ற அடைப்பான் மருந்தை மாவுப்பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.
பாதிப்பில் இருந்து மரம் மீண்டு வருவதை உணர்த்தும் அறிகுறிகள்...
** மரம் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் நான்கு மாதத்திற்கு பின்பே தெரியும். புதிய கிளைகள் மற்றும் இலைகள் தோன்றிய ஒரு மாதத்திற்கு பிறகு உரம், தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்ட கலவையை அளிக்க வேண்டும்.
** மரப்பட்டையினுள் பாதிக்கப்பட்ட திசுக்கள் முழுமையாக மறைந்து விடும். பாதிக்கப்பட்ட மரம் முதல் ஆண்டு விளைச்சலில் பாதியை கொடுக்கும். படிப்படியாக குணமடைந்து விளைச்சலையும் கொடுக்க ஆரம்பிக்கும்.
** பத்து வயது மரத்தில் பாதிப்பு இருந்து அதனை குணப்படுத்தினால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பலன் அளிக்கும். இதன் மூலம் ரூபாய் 200 செலவு செய்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு விளைச்சல் எடுக்கலாம்.
** அடைப்பன் மருந்து புழுக்களின் சுவாசத்தை இழக்க செய்து புழுக்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதிலுள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுவதால் மரங்கள் பாதிப்பில் இருந்து வேகமாக மீள்கின்றன.
** எனவே, விவசாயிகள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாமரங்களை தண்டுத் துளைப்பான்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.