இந்த நெல் ரகத்தில் குலைநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த இதுதான் சரியான வழி..
பி.பி.டி. 5204 என்னும் பொன்னி நெல் ரகத்தில் குலைநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த இதுதான் சரியான வழி...
நோயின் அறிகுறிகள்:
குலைநோய் பயிரின் எந்தப் பருவத்திலும் தாக்கலாம். இலை மேல்பரப்பு, கணு மற்றும் தண்டுப்பகுதிகளில் நீள் வடிவத்தில் கண் வடிவப் புள்ளிகள் காணப்படும்.
புள்ளியைச் சுற்றி சாம்பல் நிறத்திலும், ஓரத்தில் சிவப்பு நிறத்திலும் காணப்படும். கண் வடிவப் புள்ளிகள் ஒன்றாக இணைந்து இலைமுழுவதும் பரவி இலை காய்ந்தது போலாகிவிடும்.
தூரத்திலிருந்து பார்த்தால் பயிர் எரிந்தது போலத் தெரியும்.
இலைக் கணுக்கள் கருப்பு நிறமாகி ஒடிந்தது போலத் தெரியும்.
குலை நோய்த் பூக்கும் பருவத்திலும் கதிரில் உள்ள மணிகளையும் தாக்கும்.
குலைநோயை கட்டுப்படுத்த:
தழைச்சத்தைப் பிரித்து யூரியாவுடன் கலந்து இட வேண்டும்.
வரப்பில் உள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும்.
நோய்த் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சாணக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் மூலமாக ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.