நெற்பயிரை தாக்கும் சிலந்தி

நெல் பயிரைத் தாக்கும் சிலந்தி இனங்களை அழிப்பது தொடர்பான முறைகளைக் கையாண்டு, தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் விவசாயிகள் பார்த்துக் கொள்வது அவசியம்.

பொதுவாக, நெல் பயிரை ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் "ஒலிகொநிகஸ்ஒரைசி' எனப்படும் ஒரு வகையான சிலந்தி இனங்கள் தாக்கும்.

இதன் தாக்குதல் காரணமாக, நெல் பயிர் அதிக சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.

இந்த வகையான சிலந்தி தாக்குதலில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வெப்பநிலை, ஈரப்பதம் அதிக அளவில் நிலவும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்த சிலந்தியின் தாக்குதல்கள் நெற்பயிரில் அதிகமாக காணப்படும்.

இந்த சிலந்தி தாக்குதலின் அறிகுறியாக, பயிர்களின் அடி இலைகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற துகள்கள் போன்ற புள்ளிகள் தோன்றும். இலை நரம்புகளுக்கிடையில் உள்ள பகுதி வெளுத்துக் காணப்படும்.

பின்னர், அனைத்து இலைகளிலும் இப்புள்ளிகள் பரவி வெண்ணிறமாக மாறிவிடும். இதனால் பயிரில் ஒளிச்சேர்க்கை செய்வது தடைபட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.