Asianet News TamilAsianet News Tamil

பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்...

Things to Watch Out for Pesticides
Things to Watch Out for Pesticides
Author
First Published Jun 22, 2018, 4:08 PM IST


** அருகில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருக்கும் பயிர்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் இருந்தால் அவற்றுக்கு பூச்சிக்கொல்லி சென்று சேராத வண்ணம் கவனத்துடன் பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். 

** பூச்சிக்கொல்லி தெளிப்பவர் உடலில் காயங்கள், புண்கள் எதுவும் இல்லாதவராக இருக்க வேண்டும். 

** தனி ஆளாக பூச்சிக்கொல்லியை அடிக்கக்கூடாது. எப்பொழுதும் ஒருவர் உடன் இருப்பது நல்லது.

** பாதுகாப்பான, காற்றோட்டமான, உலர்ந்த, ஈரப்பதமில்லாத அறையில் குழந்தைகள், மற்றவர்கள் அணுகமுடியாத வகையில் பூச்சிக்கொல்லிகளை பூட்டி வைக்க வேண்டும். 

** பூச்சிக்கொல்லிகளை சமையலறையில் வைக்கக் கூடாது. நேரடியாக சூரியஒளி, மழை படும் இடங்களிலும், நெருப்புக்கு அருகிலும் வைக்கக் கூடாது. 

** பூச்சிக்கொல்லி அடிக்கும் வேலை முடிந்த அன்றே பயிர்ப் பாதுகாப்புக் கருவிகளில், பூச்சிக்கொல்லி கலன்களில் உள்ள பூச்சிக்கொல்லியைக் காலி செய்துவிட்டு சுத்தம்செய்து வைக்க வேண்டும்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios