1.. இளம் பெட்டை ஆடுகளின் பராமரிப்பு

1.. நல்ல தரமுள்ள பசும்புல் மற்றும் அடர் தீவனங்களை சரியான சமயத்தில் அளித்து வருதல் நல்ல சினை ஆடுகளைத் தயார் செய்ய உதவும்.

2.. கலப்புச் செய்ய வேண்டிய ஆடுகளை வாரா வாரம் சரிபார்த்துப் பதிவேட்டில், குறித்துக் கொள்ள வேண்டும்.

3.. ஒவ்வொரு 18-24 நாட்களுக்கு ஒரு முறை பெட்டை ஆடு சூட்டிற்கு வரும். இந்தச்சூடானது 2-3 நாட்கள் வரை இருக்கும். 

4.. சராசரி சினைக்காலம் 151+3 நாட்கள் ஆகும்.

2.. சினை ஆடுகள் பராமரிப்பு

1. சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும்.

2. சரிவிகித ஊட்டச்சத்துக்கள், எளிதில் செரிக்கக்கூடிய தீவனமளித்தல்.

3. சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.

4. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.

5. குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது.

6. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விடவேண்டும்.