Asianet News TamilAsianet News Tamil

இந்த இரண்டு பூச்சிகள் தாக்குவதால்தான் கத்திரிக்காயில் அதிக சேதமே! 

These two insects attack only the most damage to the eggplant!
These two insects attack only the most damage to the eggplant!
Author
First Published Jul 6, 2018, 2:20 PM IST


பச்சைத் தத்துப்பூச்சி - தாக்குதலின் அறிகுறிகள்

இளநிலை மற்றும் முதிர்ந்த நிலை தத்துப்பூச்சிகள் இலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன. பின்னர் இலைகள் பழுப்பாகி, கருகி விழுந்துவிடும். 

பெண் தத்துப்பூச்சி முட்டைகளை இலைகளின் நரம்புகளின் இடையே இடும். முட்டையில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் இளம் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். வளர்ந்த பூச்சி பச்சை நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

** சிறு இலை நோய் தாக்கிய செடிகளை பிடுங்கி எரித்து விடவேண்டும்.

** தத்துப் பூச்சியால் தாக்கப்பட்ட இலைகளை பூச்சிகளுடன் சேகரித்து அழித்து விடவேண்டும்.

** மீத்தைல் டெமட்டான் 25 இசி 2 மி.லி./ லிட்டர் அல்லது டைமீத்தோயேட் 30 இசி 2 மி.லி. / லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நிறக்கூன்வண்டு (மில்லோசிரஸ் இனம்)

** முதிர்ந்த வளர்ச்சியடைந்த கூன்வண்டுகள் இலைகளின் ஓரங்களைக் கடித்துத் தின்கிறது.

** இதன் புழுக்கள் வேர்களைக் கடித்துத் தின்பதால் செடிகள் வாடிவிடுகின்றன.

** புழு மிகப் பெரியதாகவும், 'C' போல வளைந்தும் வெள்ளை உடலுடன் பழுப்பு நிறத் தலையுடனும் காணப்படும்.

** இதன் வண்டுகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். ஒரு பெண் வண்டு 50 - 100 முட்டைகளை மண்ணில் இடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

** முதிர்ந்த வண்டுகளை சேகரித்து அழித்து விடவேண்டும்.

** நடவு செய்வதற்கு முன்புவின்ஸ்ட ன் 1.3 சதத்தூள் 25 கிலோ / எக்டர் என்ற அளவில் இடவேண்டும்.

** ஒரு எக்டருக்கு கார்போஃ.பியூரான் 15 கிலோவை நட்ட 15 நாட்களுக்கு பின்னர் செடிகளின் வேர்பாகத்தில் இடவேண்டும்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios