உரமிடுதலில் இந்த முறைகள் எல்லாம் தாரளாமாக பயன்படுத்தலாம்…
உழு சால் வழி உரமிடுதல்
உழவு சாலின் அடிப்பகுதியில் உரத்தை இட்டு, உழவு செய்யும் போது தொடர்ந்து உரமிடப்படுகிறது ஒவ்வொரு வட்டத்தையும் முடித்து விட்டு அடுத்த சாலுக்கு போக வேண்டும். இந்த முறை மண் எங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை உலர்ந்து, கெட்டியான மண் கட்டியாக வருகிறதோ அங்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆழமாக உரமிடுதல்
நெல் வயல்களில் அம்மோனியா நைட்ரஜன் பயிர்களுக்கு கிடைக்காமல் அப்படியே இருக்கிறதோ, அங்கு இந்த முறையில் உரமிடப்படுகிறது. இதனால் ஒரே மாதிரியாக வேர்ப் பகுதியின் அருகில் கிடைக்குமாறு செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட பகுதியில் உரமிடுதல்
விதைக்கு அல்லது பயிருக்கு அருகில் உரங்களை அளிப்பதால், வளரும் பயிர்களின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுகிறது.
பொதுவாக பின்பற்றப்படும் முறைகள்
துளை உரமிடுதல்
விதைக்கும் சமயத்தில் விதை உர தெளிப்புக் கருவியின் மூலம் உரங்கள் இடப்படுகிறது. இதனால் உரங்களும், விதையும் ஒரே வரிசையில், வெவ்வேறு ஆழத்தில் இடப்படுகின்றன. இந்த முறை சாம்பல், மணிச் சத்துக்களை தானியம் பயிர்களுக்கு அளிப்பதற்கு ஏற்றதாக இருந்தாலும், விதை முளைப்புத் திறன் குறையும் சில சமயங்களில் இளம் செடிகள் அதிகளவு உரங்களினால் மடிந்து விடுகின்றன
பக்கவாட்டில் உரமிடுதல்
பயிரின் நடுவே உள்ள வரிசைகளில் உரமிடப்படுகின்றன.
கையில் உரமிடுதல்
மக்காச்சோளம், கரும்பு, பருத்தி மற்றும் இதர பயிர்களில் கூடுதலாக தழைச்சத்து வளரும் பயிர்களுக்கு தரப்படுகின்றன
மரங்களைச் சுற்றி உரமிடுதல்
மா, ஆப்பிள், திராட்சை, பப்பாளி மற்றும் இதர மரங்களில் இந்த முறையில் உரமிடப்படுகிறது.
வேரைச் சுற்றி உரமிடுதல்
உரங்களை வேரைச்சுற்றி இடுதலாகும். இதில் 2 முறைகள் உள்ளன.
குன்றின் மீது உரமிடுதல்
பழத்தோட்டங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் பயிரைச் சுற்றி ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் உரமிட வேண்டும். வளையத்தின் நீளம் மற்றும் ஆழம் பயிர்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகிறது
வரிசை உரமிடுதல்
கரும்பு, உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், தானியங்கள் போன்ற பல பயிர்களில் வரிசையில் விதைக்கும் போது, உரங்களை தொடர்ந்து வளையங்களாக வரிசையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கமும் இடவேண்டும்.
சிறு வில்லைகளாக உரமிடுதல்
தழைச்சத்து உரங்களை 2.5 - 50 செ.மீ ஆழத்தில் நெற்பயிரின் வரிசைகளின் நடுவில் சிறு வில்லைகளாக இட வேண்டும். உரங்களை மண்ணுடன் 1:10 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். நெல் வயல்களில் தேவையான அளவுகளில் சிறு வில்லைகளாக மண்ணுடன் சேர்த்து இட வேண்டும்.