மா மரங்களை தாக்கும் இந்த வகை பூச்சியின் அறிகுறிகள் இவைதான்...
மா மரங்களைத் தாக்கும் தண்டு துளைப்பான் பூச்சி
மா மர விளைச்சலை பாதிக்கும் முக்கிய காரணிகளில் தண்டு துளைப்பான் பாதிப்பும் ஒன்றாகும். இதனால் எட்டு சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்படும். மா இரகங்களில் அல்போன்சா தண்டு துளைப்பான் பாதிப்பிற்கு உள்ளாகின்றது.
மா மரங்களைத் தாக்கும் பூச்சி "தண்டு துளைப்பான்" அறிகுறிகள்
** தண்டில் துளைகள் காணப்படுதல்
** மரத்துகள்கள் (அ) சிறியமரத்துண்டுகள் (அ) வண்டின் எச்சம் போன்றவை மரத்தின் பட்டையின் மேலோ (அ) மரத்தின் அடியில் காணப்படுதல்
** பாதிக்கப்பட்ட இடத்தில் பிசின் போன்ற திரவம் வடிதல்
** பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல்
** பாதிப்பு பாதியாக இருக்கும் போது நுனிக்கிளைகள் மேலிருந்து கீழாக காய்தல்
** பாதிப்பு இறுதி கட்டத்தின் போது வேகமாக மரங்கள் காய்தல்
தண்டு துளைப்பான் பாதிப்புகள்
பாதிக்கப்பட்ட மரங்களின் கிளைகள் மேலிருந்து கீழ் நோக்கி காய்வதால் விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. மரத்தின் வயது, காய்க்கும் திறன் மற்றும் வயது ஆகியவற்றை பொறுத்து ஒரு மரம் இறந்தால் இரண்டு முதல் நான்கு இலட்சம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படுகின்றது.
வயதான மரங்களை மட்டும் தாக்கி வந்த தண்டு தற்பொழுது பரப்பளவு அதிகரித்த காரணத்தினாலும், புதிய இரகங்களை பயிரிடுவதாலும் இளம் துளைப்பான்கள் மரங்களை கூட தாக்குகின்றன. விவசாயிகள் தண்டு துளைப்பானின் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்துகளை உபயோகித்தாலும் முழுமையான கட்டுபாடு கிடைப்பதில்லை.