இயற்கை முறையில் தென்னை சாகுபடி செய்ய இவைதான் அடிப்படை…
மண்
செம்பொறை மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் உகந்தவை ஆழமான (அதாவது 1.5 மீ ஆழத்திற்கு குறைவின்றி) வடிகால் வசதியுடன் கூடிய கடின மண்ணினை / மண்னுள்ள பகுதியை தேர்வு செய்ய வேண்டும். வடிகால் வசதியற்ற மண்ணினை தேர்வு செய்யக்கூடாது. மேற்புற மண்ணுடன் கூடிய கடின பாறை, நீர் தேங்கும் மற்றும் கடின களிமண் வகைகளை தவிர்ப்பது நல்லது.
தென்னை சாகுபடிக்கு குறைந்தபட்ச ஆழமான (1.2மீ) மற்றும் ஓரளவு நன்கு நீரை தக்க வைக்கும் திறன் கொண்ட மண்வகையானது உகந்தது. மேலும் நிலத்தின் நீரை தக்க வைக்கும் திறன் மணல் மற்றும் களிமண்ணை அடுத்தடுத்த அடுக்குகளாக குவிப்பதனால் அதிகரிக்கிறது.
சீரான (அ) பரவலான மழை அல்லது நீர்ப்பாசனத்துடன் கூடிய முறையான ஈரப்பதம் மற்றும்போதுமான அளவு வடிகால் வசதி ஆகியவை தென்னைக்கு இன்றியமையாதவை* அமிலக்காரத் தன்மை 5.2 முதல் 8.6 வரை கொண்ட மண்ணில் தென்னை நன்கு வளரக்கூடியது.
நிலம் தயாரித்தல்
நடவிற்கு முன் நிலம் தயாரித்தலானது நில அமைப்பு, மண்னின் வகை மற்றும் இதர சுற்றுப்புற சூழ்நிலைக் காரணிகளை பொறுத்தது. நடவிற்கு ஏற்ற இடமானது சுத்தப்படுத்தப்பட்டு, உரிய இடங்களில் நடவிற்கான குழிகளை குறியிட்டு இருத்தல் வேண்டும்.
சரிவான நிலமாக இருந்தால், மண் அரிப்பை தடுப்பதற்கான மற்றும் மண்ணை பாதுகாக்கும் முறைகளை கையாள வேண்டும். உயர்மட்ட நிலத்தடி நீராக இருப்பின் சிறு குன்று / மண்மேடுகளில் கன்றுகளை நடுவது சிறந்தது.
சரிவு அல்லது சமச்சீரற்ற நிலங்களில் சமதள வரப்புகளை அமைத்தல் வேண்டும். கீழ்மட்ட மற்றும் நெல் வயல்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் மேல் குறைந்த பட்சம் 1மீ உயரம் வரை மணல் மேடுகளை உருவாக்குதல் வேண்டும். சீர்படுத்தப்பட்ட வயல் இடங்களில் நடவானது நிலவரப்புகளில் செய்யப்படுகிறது.
நிலம் வடிவமைத்தல்
பல்வேறு முறையான நடவினை பின்பற்றினாலும் தகுந்த முறையினை தேர்ந்தெடுத்தல் மண், காலநிலை, கன்றுகளின் வகையைச் சார்ந்து இருக்க வேண்டும்
தகாத முறையை பின்பற்றினால் செடியின் பாகங்கள் மற்றொன்றின் மீது சாய்ந்தும் செடிகளுக்கிடையே நீர், ஓளி, ஊட்டச்சத்திற்காக போட்டியும் நீரின் சமச்சீரற்ற பகிர்ந்தளிப்பும் உருவாகி அதன் விளைவாக செயல்பாடு குறைந்து காணப்படும்.
சதுர முறை, செவ்வக முறை, முக்கோண முறை, வேலி முறை, சமவாய்ப்புமுறை ஆகிய நிலம் வடிவமைத்தல் முறைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பின்படுத்தப்பட்டு வருகின்றன.
உலர் கோடை மாதங்களில் 4 நாட்களுக்கு கன்றுக்கு 45 லிட்டர் என்ற வீதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். நாற்று நடும் முறையில் நட்ட கன்றுகளுக்கு போதுமான அளவு நிழல் அளித்தல் அவசியம்.
கன்ற நட்ட பின் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் ஒரு குச்சியை ஊன்றி அதனை சேர்த்து கட்ட வேண்டும். இதனால் வேகமான காற்றினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க இயலும்.
நீர் தேங்கக் கூடிய இடங்களில் சரியான வடிகால் வசதி அமைத்தல் அவசியம். இலைச்சருகு அதிகமுள்ள பகுதிகளில் கன்றுகளை நடும் போது செம்மண்ணை 0.14 என்ற அளவில் இடுதல் வேண்டும். குழிகளிலிருந்து களைகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.
மேலும் கழுத்துப் பகுதியில் மழையினால் அடித்து வரப்பட்ட மண்ணின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அவ்வப்போது அதனை நீக்கிவிட வேண்டும். எரு இடுவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் குழிகளை சீராக நிரப்பி வர வேண்டும். கன்றுகள் வளர வளர குழிகளை சீராக நிரப்பி வர வேண்டும்.
தென்னங் கன்றுகளில் ஏதேனும் பூச்சி மற்றும் பூஞ்சாணத்தின் தாக்குதல் காணப்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும். மேலும் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை குறைக்கத் தேவையான உத்திகளை மேற்கொள்ளுதல் அவசியம்.