பயறு வகை பயிர்களில் முக்கியமான பயிரான பாசிப்பயறை இப்படிதான் விளைவிக்கணும்…
பயறு வகை பயிர்களில் முக்கியமான பயிர் பாசிப்பயறு. உளுந்து போன்றே இதன் சாகுபடி முறையும். பாசிப்பயறு நமது அன்றாடம் வாழ்வில் பயன்படும் முக்கிய உணவுப்பொருள்.
ஏக்கருக்கு எட்டு கிலோ விதை தேவைப்படும். கடைசி உழவில் பத்து டன்கள் தொழுஉரம் இட்டு மூன்று சால் உழவு செய்து கொள்ள வேண்டும். கோமியத்தில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
பல தனியார் ரகங்கள் இருந்தாலும் வேளாண் ஆராய்ச்சி நிலைய ரகங்கள் பிரபலமானவை. தின்டிவனம் மற்றும் கோவை வேளாண்மை பல்கலைக்கழக வெளியீடுகள் மிகசிறந்த தேர்வாகும்.
இதில் இரண்டு ரகங்கள் உள்ளன. அதாவது சிறு பாசிப்பருப்பு. பெரிய பாசிப்பருப்பு. சிறுபருப்பிற்க்கு தான் சந்தை மதிப்பு அதிகம்.
பாசிபயரின் வயது 70 முதல் 90 நாட்கள். முப்பது நாட்களுக்கு பிறகு பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
கற்பூரகரைசல் தொடர்ந்து சிறு வயது முதல் தெளித்தால் நல்ல வளர்ச்சி மற்றும் அளவிற்கு அதிகமாக பூக்கள் தோன்றும். சில நேரங்களில் மீன் அமிலம் மற்றும் தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் கலந்து தெளித்தால் பூக்கள் உதிர்வை முற்றிலும் தவிர்க்கலாம்.
மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் வேரில் தொடர்ந்து அளிப்பதன் மூலம் வளமான அடர்த்தியான செடிகள் கிடைக்கும்.
ஒரே முறை அறுவடை க்கு வரும் ரகங்களில் சேதம் அதிகம் ஏற்படுவதில்லை. சில ரகங்களில் மூன்று முறை காய்ந்த காய்கள் அறுவடை செய்து பின் மகசூல் கானப்படுகிறது.
சில சமயங்களில் உளுந்தை விட அதிக சந்தைவிலை பச்சை பயிருக்கு கிடைக்கும். நிலையான சந்தை மதிப்பு உடையது.
பாசிப்பயறு அறுவடை செய்து விற்பனைக்கு தயார் ஆவதற்கு 90 நாட்கள் ஆகிவிடும்.
விதை சேமித்து வைக்க. வேப்பெண்ணை + செம்மண் + கற்பூரம் கலந்து விதைகள் மீது பூசி வைப்பதால் துளை இடும் வண்டுகள் தாக்காமல் தவிர்க்கலாம்.