நன்னீரில் மீன் வளர்க்கும்போது குளத்து மண்ணின் தன்மைகள் இப்படிதான் இருக்கணும்...
குளத்து மண்ணின் தன்மைகள்
** மண்ணின் கார அமிலத்தன்மை
குளத்தில் மீன் உற்பத்திக்கு கார அமிலத்தன்மை முக்கியமான ஒன்று. இது குளத்தில் உள்ள இரசாயன வினைகளை கட்டுப்படுத்துகிறது. நடுநிலையிலிருந்து சிறிது காரத் தன்மையுள்ள மண் காரஅமிலத்தன்மை (7 மற்றும் அதற்கு மேல்) உள்ளவை மீன் உற்பத்திக்கு ஏற்றதாகும். இந்த அளவைவிட குறைந்தால் அமிலத்தன்மையாக மாறி நீரில் உள்ளச் சத்துக்களை குறைத்துவிடும்.
** கரிம உள்பொருள்
பாக்டீரியாவின் ஆற்றலை அதிகரிக்க மற்றும் உயிர் வேதியல் முறை மூலம் நுண்ணுயிர்களில் இருந்து சத்துக்கள் வெளியாகிறது. இயற்கை கரிமம் குளத்து மண்ணில் 0.5%க்கு குறைவாக இருக்கக் கூடாது. 0.5-1.5% மற்றும் 1.5 - 2.5%. நடுநிலை மற்றும் அதிக அளவு இருக்கலாம். இதே போன்று 2.5%க்கு மேல் இருந்தால் மீன் உற்பத்தி செய்ய முடியாது.
** கரிமம்: நைட்ரஜன் விகிதம்
மண் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு கரிமம்:நைட்ரஜன் விகிதம் தேவைப்படுகிறது. கரிமம்:நைட்ரஜன் விகிதம் உடையும் அளவு அதி வேகமாக, நடுநிலை, குறைவாக முறையே >10,10-20, 20 என்றவாறு இருக்க வேண்டும். பொதுவாக கரிமம்:நைட்ரஜன் விகிதம் 10 முதல் 15க்குள் இருந்தால் மீன் வளர்ப்புக்கு ஏற்றதாகும். 20:1 இருந்தால் மீன் அதிகளவு உற்பத்தியாகும்.