Asianet News TamilAsianet News Tamil

வெங்காயத்தைத் தாக்கும் நோயைக் கட்டுப்படுத்த இந்த முயற்சி கைக்கொடுக்கும்…

the effort-to-control-the-disease-will-attack-venkayatt
Author
First Published Jan 14, 2017, 2:38 PM IST

வெங்காயத்தைத் தாக்கும் அடித்தாள் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து பார்க்கலாம்.

வெங்காயமானது அல்லியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்தது. உணவில் அதிகளவில் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதிக மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

இத்தகைய வெங்காயத்தை அடித்தாள் அழுகல் நோய் தாக்குகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல், இடைகால், பாவூர்சத்திரம் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் வெங்காயமானது பயிரிடப்பட்டு உள்ளது. அவற்றில் அடித்தாள் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

அடித்தாள் அழுகல் நோயை பூஞ்சாண கிருமியானது பரப்புகிறது. இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் மெதுவாகக் காய ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும். செடியின் இலைப்பரப்பு முழுவதும் வாடும். வெங்காய குமிழ் மென்மையாகி அழுகும். அத்துடன் வேர்கள் அழுகும். வெள்ளை நிற பூஞ்சாண வளர்ச்சி இதன்மேல் தோன்றும். இந்த நோய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கிலும் காணப்படும்.

இந்நோயைக் கட்டுப்படுத்த…

1.. இந்நோயைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.

2.. அறுவடை செய்த வெங்காய குமிழ்களைச் சுத்தமாக சேமிக்க வேண்டும்.

3.. மண்ணில் தாமிர அளவு குறையும்போது வெங்காயம் இந்நோயால் தாக்கப்படும். இதனால் தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சேர்க்க வேண்டும்.

4.. தாமிர ஆக்ஸிகுளோரைடை 0.25 சதவிகிதம் மண்ணில் இட வேண்டும்.

5.. டிரைக்கோடெர்மா என்ற பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து உடனே விதைக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios