மொட்டை மாடியில் காய்கறிகள் வளர்க்க இப்படி ஒரு சூப்பர் வழி இருக்கு...
மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம்
மொட்டை மாடியில் 30 45 செ. மீ. மண் கொட்டி காய்கறி வளர்க்கலாம். ஆனால் உங்கள் வீட்டின் மேற்தளம் வாட்டர் புரூப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் ஷீட் 200 மைக்கரான் கனத்தில் மேற்கூரையில் பரப்பி பின் அதன் மேல் மண் கொட்ட வேண்டும்.
இதெல்லாம் ரிஸ்க் என நினைத்தால் இருக்கவே இருக்கிறது கன்டனைர்ஸ் மற்றும் பழைய சாக்கு, டிரம் போன்ற கருவிகள். மேற்கூரையில் மண் பரப்பி விட்டு நீங்கள் காய் கறித் தோட்டம் அமைக்கலாம்.
12” உள் விட்டம் உள்ள தொட்டிகளைத் தேர்ந்தெடுத்துக் காய்கறி சாகுபடி செய்வது சுலபம். தொட்டிகளைத் தேர்ந் தெடுக்கும்போது அதில் நிரப்பப்படும் மண் கலவையை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
மூன்றில் ஒரு பகுதி செம்மண், ஒரு பகுதி சாதாரண மணல், மீதி ஒரு பகுதி நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கடைகளில் கிடைக்கும் கம்போஸ்ட். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மண்தொட்டிகளின் அடியில் நீர் வெளியேற சரியான துளை உள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொட்டிகளைக் கிழக்கு மேற்கு திசையில் அடுக்கி வைத்தால் போதுமான சூரிய ஒளி கிடைக்கும். காய்கறித் தோட்டம், உடலுக்கு நல்லதென்றால் பூந்தோட்டம் மனதுக்கு சுகம் தரும்.