கத்தரிக்காயைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சியான அசு உணி

அறிகுறிகள்

இளம் மற்றும் வளர்ந்த அசு உணிகள் இலையில் இருந்து கொண்டு, சாற்றை உறிஞ்சி செடிகளை வளர்ச்சி குன்ற செய்கிறது. இதனால் இலைகள் சிறியதாகி, வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. மேலும் காய்கள் பிடிக்காமல் மகசூல் பாதிக்கப்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

** அசு உணியினால் பாதிக்கப்பட்ட இலைகள், கிளைகள், தளிர்களை பூச்சிகளுடன் சேகரித்து அழிக்க வேண்டும்.

** அசு உணி தாக்குதலைத் தாங்கக்கூடிய அண்ணாமலை 1 கத்தரி வகையை பயிரிடலாம்.

** மஞ்சள் நிற ஒட்டு பொறிகள் மற்றும் விளக்குப்பொறிகள் மூலம் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறியலாம்.

** கிரைசோபேர்லா கார்னியா பூச்சிகளின் முதல் நிலை குஞ்சுகளை ஒரு எக்டருக்கு 10,000 என்ற அளவில் வெளியிட்டு கட்டுப்படுத்தலாம்.

** டைமீத்தோயேட் 30 இசி 2 மி.லி. / லிட்டர் (அ) மீத்தைல் டெமட்டான் 25 இசி 2 மி.லி./லிட்டர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.