கன்று ஈன்ற மாடுகளுக்கு வரும் இந்த பெரும் சிக்கல்களைத் தவிர்க்க சில வழிகள்….

Some ways to avoid these great problems coming to the calf calves ....
Some ways to avoid these great problems coming to the calf calves ....


கன்று ஈன்ற கறவை மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் கருப்பை வெளித்தள்ளுதல் ஆகிய இரண்டு முக்கிய சிக்கல்கள் உருவாகின்றன.

நஞ்சுக்கொடி தங்கியுள்ள மாடுகளில் காணப்படும் அறிகுறிகள்:

கன்று ஈன்று 8 மணி நேரத்திற்கு பின்பும் நஞ்சுக்கொடி தங்கியிருக்கும் மாடுகளில் காய்ச்சல், சோர்வு, தீவனம் உண்ணாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

கன்று ஈன்ற 24 மணி நேரம் கழிந்த பின் நஞ்சுக்கொடி அழுக ஆரம்பித்து துர்நாற்றம் அடிக்கும். அறையின் வெளிப்புறத்தில் ஈக்கள் மொய்க்கும். பால் உற்பத்தி குறைந்து விடும்.

நஞ்சுக்கொடி தாக்குதல்

மாடுகள் சினையாக இருக்கும்போது கருப்பையினுள் வளரும் சிசுவுக்கு தேவையான உணவு மற்றும் பிராண வாயுவை அளிப்பதுடன் சிசுவின் கழிவுப் பொருள்களை அகற்றும் உறுப்பாக செயல்படுவது நஞ்சுக்கொடி ஆகும்.

பொதுவாக கன்று ஈன்ற 3 முதல் 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாகவே வெளித்தள்ளப்பட்டு விழுந்துவிடும். இதற்கு மேலும் அதாவது 8 முதல் 12 மணி நேரம் கழிந்தும் கூட நஞ்சுக்கொடி விழாமலிருந்தால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும்.

சில விவசாயிகள் கன்று ஈன்ற மாடு நஞ்சுக்கொடி போடும் வரை பாலில் நச்சுத்தன்மை இருக்கும் என நினைத்துக்கொண்டு சீம்பாலினைக் கறக்காமல் இருப்பர். இது அறிவியல் ரீதியாக உண்மையல்ல.

மாறாக கன்றினை பால் குடிக்க விடுவதால் அல்லது பாலினைக் கறப்பதால் ஈன்ற மாடுகளின் நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பை சுருங்கி விரியும். இதனால் நஞ்சுக்கொடி தானாகவே விழும் வாய்ப்புள்ளது.

சிலர் தொங்கிக் கொண்டிருக்கும் நஞ்சுக்கொடியை விழ வைப்பதற்காக அதை ஒரு குச்சியைக்கொண்டு சுற்றி இழுப்பார்கள் அல்லது அதில் ஒரு கல்லைக் கட்டி விடுவர்.

இவ்வாறு செய்வதால் நஞ்சுக்கொடியானது முழுமையாக பிரிந்து வராமல் மாட்டிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் பகுதி மட்டும் அறுந்து விழுந்துவிடும். மீதம் உள்ள பகுதி கருப்பையின் உள்ளேயே தங்கி நோயை உருவாக்கும்.

அடுத்து கன்று ஈன்றவுடன் மாடுகளுக்கு மூங்கில் இலை அல்லது வெண்டைக்காய் அல்லது சந்தனம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம்.

தீர்வு

மூங்கில் இலை மற்றும் வெண்டைக்காயில் கருப்பையைச் சுருங்கி விரியச் செய்யக்கூடிய வேதிப்பொருள் உள்ளது. இது கருப்பையைச் சுருங்கி விரியச் செய்வதால் நஞ்சுக்கொடி தானாகவே பிரிந்து விழ வாய்ப்புள்ளது.

சிவப்பான நீரைப்போன்ற திரவம் மிக அதிக அளவில் துர்நாற்றத்துடன் காணப்படும். இது இரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து விட்டதைக் குறிக்கும். நஞ்சுக்கொடி தொங்கிக் கொண்டிருக்கும்போது மாடு கீழே படுப்பதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும்.

பின் குறிப்பு

நஞ்சுக்கொடிதானே என நினைத்து தகுதியற்றவர்களைக் கொண்டு எடுக்க முற்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவர்கள் கருப்பையில் உள்ள முடிச்சுகளை முறையாகப் பிரித்து எடுக்காமல் நஞ்சுக்கொடியை வெறுமனே பிடித்து இழுப்பார்கள். இதனால், கருப்பை முடிச்சுகள் அறுந்து இரத்தக் கசிவு ஏற்படும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios