நடவு வயலில் ஊட்டச்சத்து மேலாண்மை

** அங்கக உரங்களின் அளிப்பு

** 12.5 டன் பண்ணை எரு அல்லது மட்கிய உரம் அல்லது பசுந்தாள் இழை உரம் 6.25 டன் / ஹெக் என் அளவில் இடவேண்டும்.

** பசுந்தாள் செடிகளை 20 கி / ஹெக்என்ற அளவில் வளர்த்து பின் 15 செ. மீ ஆழத்திற்கு டிராக்டர் அல்லது பசுந்தாள் பண்ணைக் கருவிக் கொண்டு உழுதுவிட வேண்டும்.

** பசுந்தாள் உரத்திற்கு பதிலாக சர்க்கரை கழிவு / மட்கிய தென்னை நார் கழிவையும் பயன்படுத்தலாம்.

கோதுமையில் ஊட்டச்சத்து மேலாண்மை

** பண்ணை எரு அல்லது மட்கிய உரம் அளிப்பு 12.5 டன் / ஹெக் பண்ணை எரு அல்லது மட்கிய உரம் உழவு செய்யாத வயலில் இட வேண்டும்.

** தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை முடிந்த அளவு மண் ஆய்வு பரிந்துரைப்படி இட வேண்டும். மண் ஆய்வு பரிந்துரை இல்லாவிடில், பரிந்முரைக்கப்பட்ட 80:40:40 தழை, மணி, சாம்பல் சத்து கிலோ / ஹெக் என்ற அளவில் இடவேண்டும்.

** பகுதி அளவு தழை மற்றும் முழு அளவு மணி, சாம்பல் சத்து அடியுரமாக விதைப்பதற்கு முன் இட்டு, விதைக்கும் நேரத்தில் பரப்பி விட வேண்டும்

** உச்சிப் பகுதி வெளி வரும் போது 15 – 20 நாள் விதைப்பிற்கு முன் மீதியுள்ள பகுதி தழைச்சத்து உரத்தை இடவேண்டும்.