மண்புழு உரத்தினால் மண்ணுக்கும், விவசாயிக்கும் கிடைக்கும் பயன்கள்:

** இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல தரமுடைய, நச்சுத்தன்மையற்ற எரு கிடைக்கிறது.

** பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.

** தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.

** பல மக்களுக்கு, மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.

** இளைஞர்களும், சுய உதவி குழு சார்ந்த பெண்களும் குழுவாக சேர்ந்து இதனை தயார்செய்யது விற்பனை செய்யலாம்.