செம்மறி ஆட்டு இனங்கள் 

நிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம். வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில், செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பெறலாம்.

இனங்கள்

இராமநாதபுரம் வெள்ளை, கீழக்கரிசல், நீலகிரி, திருச்சி கருங்குரும்பை, மேச்சேரி, மெரினோ போன்ற இனங்கள் உள்ளன.

பயன்பாடுகள்

1.. மெரினோ - கம்பளிக்கு பயன்படும்

2.. ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு பயன்படும்.

3.. சோவியோட் - கறிக்கு பயன்படும்

4.. செளத் டான் - கறிக்கு பயன்படும்

நன்மைகள்

1.. அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.

2. கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது

3.. உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.

4.. சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.

5.. ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.

6.. எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.