வாழைகளுக்கு ஏற்ற தட்பவெட்டம் முதல் தோட்டம் அமைத்தல் வரை ஒரு அலசல்…
உலகில் இருவகையான வாழைகள் உள்ளன.
காயாக சமையலுக்கு பயன்படுவது வாழைக்காய் (plantain), பழமாக உண்ணப்படுவது வாழைப்பழம் (banana).
பழ வகை தாவரங்களில் வாழைமரம் மட்டுமே ஒருவிதையிலைத் தாவரமாகும். மற்றைய பழமரங்கள் இருவிதையிலைத் தாவரங்களாகும்.
பழவகை வாழை நல்ல திரண்ட உருளை வடிவ பழங்களைக் கொண்டிருக்கும்.
காய்வகை வாழைகள் நீளமாக இருந்தாலும் சற்று பட்டையான பக்கங்களுடன் இருக்கும்.
வாழக்கு ஏற்ற தட்பவெப்பம்
நீர் அதிகம் கிடைக்கும், நிலநடுக்கோட்டு பகுதிகளில் வாழை நன்றாக வளரும்.
வெப்பநிலை 20 – 30° C இருப்பது நல்லது. 10° C-க்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும்.
உறைபனி வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும்.
மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழை விவசாயியின் முக்கிய பிரச்சனை.
மணிக்கு 30 – 50 கி.மீ வேகமான காற்று, வாழை இலைகளையும், சில சமயம் வாழைக் குலையையும் உடைத்துவிடும்.
மண்
வாழை பலவிதமான மண்வகைகளில் வளரும் தன்மையுடையது. ஆனால், நல்ல வடிகால் வசதி தேவை. நிலம் சற்றே அமிலத் தன்மையுடன் இருப்பது அவசியம்
வாழைக்கன்றுகள்
வாழைக்கன்றுகள் வாழைக்கிழங்கில் இருந்து வளர்கின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது.
நடுமுன் இம்முளைகளை வெந்நீரிலும், பூச்சி மருந்துகளிலும் நனைக்கின்றனர். இதன்மூலம் நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைகிறது.
இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும். இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்.
தோட்டம் அமைத்தல்
வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தைப் பொறுத்து ஏக்கருக்கு 400 - 800 வீதம் நடப்படுகின்றன.
வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும்.
முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு குருத்துகள் மட்டுமே வளர விடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6-8 மாதங்களுக்குப் பின் பழம் தர வல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் வேறு குருத்துக்கள் வளர்வதால் சில ஆண்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும்.
காற்றினாலோ, வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டுவதுண்டு.