மஞ்சளில் விதை தேர்வு முதல் விதை நேர்த்தி வரை ஒரு அலசல்...
மஞ்சளில் விதை தேர்வு
நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும்.
இயற்கை முறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது.
விரலி மஞ்கள் அல்லது கிழங்கு மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை.
விதை நேர்த்தி
மஞ்சளை அறுவடை செய்தவுடன் செதிள் பூச்சி மற்றும் பூஞ்சணம் தாக்காதவாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சளை நடுவதற்கு முன்பும் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை முளைப்புத் திறன் நன்கு இருக்கும். பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதல் இருக்காது.
அறுவடை செய்தவுடன் விதை நேர்த்தி
600 - 800 கிலோ விதை மஞ்சளுக்கு ஆவூட்டம் (பஞ்சகவ்யம்) – 2 – 5 லிட்டர் சூடோமோனஸ்- 1- 2 கிலோதண்ணீர் – தேவையான அளவுஇவற்றை நன்கு கலக்கி விதை மஞ்சள் நன்கு மூழ்குமாறு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் விதை நேர்த்தி செய்த மஞ்சளை நிழலில் உலர வைத்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெப்பம் மற்றும் தண்ணீர் புகா வண்ணம் சேமிக்க வேண்டும். மஞ்சள் நடவு செய்வதற்கு முன்பாக மற்றுமொருமுறை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நடவு முன் விதை நேர்த்தி
ஆவூட்டம் – 2 லிட்டர்சூடோமோனஸ் – 1 கிலோதண்ணீர் – 100 லிட்டர்இவற்றை நன்கு கலந்து விதை மஞ்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நடவு செய்யலாம். இவ்வாறு செய்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். செதில் பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் வெகுவாகக் கட்டுப்படும்.