ஜீவாமிர்தம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

நாட்டு பசுஞ்சாணம் - 10 கிலோ (அ) நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளை மாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமை மாட்டுச்சாணம் 5 கிலோ 

நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அ) நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், 

வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், 

இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) 

பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப்பட்ட காட்டின் மண் கையளவு 

மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை


மேலே குறிப்பிட்டவற்றை தொட்டியில் விட்டு கலக்க வேண்டும் தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

இந்த ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.