Poultry for laying eggs to declare will follow these practices.

முட்டைக் கோழி வளர்ப்பு

கூண்டு முறையில் வளர்க்கப்படும் முட்டைகோழி வளர்ப்பில் முதல் 10 வாரங்கள் செட்டில் வளர்க்கப்படும். (கொட்டகை போன்ற அமைப்பு) பிறகு செல்களில் அடைத்து முட்டையிடும் பருவத்தில் வாரம் ஆறு முட்டை வீதமாக கிட்டத்தட்ட 52 வாரங்களுக்கு ஒவ்வொரு கோழியும் முட்டையிடும். பருவம் முடிந்ததும் அந்த கோழிகள் கறிக்காக கொல்லப்பட்டு விடும்.

இவ்வாறு, முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டை இருவிதமாக வளர்க்கப்படும்.

நல்ல உயர் ரக சேவல்களிலிருந்து செமன் எடுக்கப்பட்டு அதை கோழிகளுக்குள் இன்செமனேசன் செய்து குஞ்சு பொறிக்கத் தகுந்த முட்டைகள் ஒருபுறம் உற்பத்தி செய்யப்படும்.

இன்செமனேசன் செய்யாத முட்டைகள் தனியாக விற்பனைக்கு அனுப்படுகிறது. அவ்வாறு இன்செமனேசன் செய்யப்பட்ட முட்டைகள் பண்ணைகளில் தனியே தரம் பிரிக்கப்பட்டும் இயந்திரத்தின் உதவியுடன் குஞ்சுகளாக பொறிக்கப்பட்டு தனியே சிறு பண்ணைகளுக்கு "கோழி வளர்ப்பிற்க்காக விற்பனை செய்யப்படுகிறது.

பொங்களூர், கோவை, பல்லடம் போன்ற தென்மாவட்டங்களில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளது. 

நாமக்கல் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக இருந்து வருகிறது. இங்கே முட்டை, கறிக் கோழிகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது.