NFSM ன் விவசாயிகளுக்கான உதவிகள்…

nfsms assistance-for-farmers


நெல் இரகம் மற்றும் ஒட்டு இரகத்திற்கான கிட்டுகள் மாநில விவசாய துறைகளில் கிடைக்கப் பெறுகிறது. (NFSM கீழ்)

சான்றளிக்கப்பட்ட உயர்விளைச்சல் இரக விதை விநியோகத்திற்கான உதவி – ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 500 அல்லது விதையின் விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

ஒட்டு இரக விதை விநியோகத்திற்கான உதவி – ரூபாய் 2000 அல்லது விதையின் விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

ஒட்டு இரக உற்பத்திக்காக ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1000 உதவியாக அளிக்கப்படும்.

நுண் ஊட்டச்சத்திற்கான உதவி – ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500, அல்லது செலவில் 50 %, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

அமிலத்தன்மையுடைய மண்ணிற்கு சுண்ணாம்பு அளிப்பதற்கான உதவி – ரூபாய் 500, ஒரு ஹெக்டருக்கு  அல்லது 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

கோனோவீடர் மற்றும் ஏனைய கருவிகள் வாங்குவதற்கான உதவி – ரூபாய் 3000, அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

விதைக்கும் கருவி, களை எடுக்கும் கருவி போன்றவைக்கு, ரூ 15,000 ஒரு கருவிக்கு, அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

ரோடேவேட்டர் வாங்குவதற்கான உதவி – ரூபாய் 30,000, அல்லது, கருவிக்கான விலையில் 50% இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

நேப்சாக்கு தெளிப்பான் வாங்குவதற்கான உதவி – ரூபாய் 3,000 அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

பயிர் பாதுகாப்பு இரசாயணங்கள் வாங்குவதற்கான உதவி – ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500, அல்லது ஆகும் செலவில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

மேம்படுத்தப்பட்ட செயல்முறை சாகுபடி, ஒட்டு இரகம் மற்றும்  செம்மை நெல் சாகுபடோ ஆகியவற்றிற்கான கள செயல்விளக்கமும் அளிக்க உதவி பெறலாம்.

விவசாயிகளும் NFSM நடத்தும் விவசாய கள பள்ளிகளில் சேர்ந்து பயன் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios