கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், குளோரின், கந்தகம் போன்றவைகள் அதிக அளவிலும் தாமிரம், துத்தநாகம், கோபால்ட், மாங்கனீசு, அயோடின், மாலிப்டினம், இரும்பு, செலினியம் போன்றவைகள் குறைந்த அளவிலும் தேவைப்படும் தாதுப்புக்கள் ஆகும்.

தாதுப்புக்களின் குறைவினால் ஏற்படும் பிரச்னைகள்:

** கன்றுகள் மட்டும் கிடேரிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

** பசுக்கள் சீரான இடைவெளியில் சினைப்பருவத்திற்கு வராததோடு மட்டுமல்லாமல் கருத்தரிப்பும் தடைபடும்.

** கருத்தரித்து இருந்தாலும் சினைக்காலம் முடியும் வரை குட்டிகளைத் தாங்கும் சக்தி குறைந்து கருச்சிதைவு ஏற்பட்டு கன்று வீச்சுகளும் ஏற்படக்கூடும்.

** சில சமயங்களில் தாதுப்புகளின் பற்றாக் குறையினால் இறந்த குட்டிகளை ஈணுதல் மற்றும் குறைமாத, வலிமை குன்றி எலும்பும் தோலுமாக குட்டிகள் பிறக்க நேரிடலாம்.

** ஈன்ற கால்நடைகளின் பால் உற்பத்தி குறையும்.