பருத்தி சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய உர மேலாண்மை முறைகள்...
அ) தொழுவுரம்
தொழுவுரம் 15 டன் /ஹெக்டர் என்ற அளவில் நடவுக்கு முன்னர் நிலத்தில் இட்டு நன்கு கிளரி விட வேண்டம். தொழுவுரம் நன்கு மக்கியதாக இருக்க வேண்டும். மேலும் உயிர் உரமான டிரைகோடர்மா விரிடியுடன் கலந்து இருப்பது சிறப்பு. வருடங்களில் மண்வளம் மேம்படுத்தப்பட்டவுடன் இந்த அளவை 5-10 டன்/ஹெக்டருக்கு என்ற அளவில் படிப்படியாக குறைக்கலாம்.
ஆ) தீவனதட்டைப்பயிர்
நடவு செய்த 40 நாட்களுக்கு பிறகு பசுந்தாள் பயிர்களுடன் தீவன தட்டைபயிரை நடவு செய்ய வேண்டும்.இது பயிர் வளர்ச்சி பருவத்தின் பொழுதும்,பயிர் பூக்கும் தருணத்திலும் பருத்தி பயிருக்கு தேவையான தழைச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
இது மண்ணில் நுண்ணுயிர் பெருக்கத்தையும் துரிதப்படுத்துகிறது.கறைசலைக் கட்டுப்படுத்தி இயற்கை நோய் கட்டுப்பாட்டு அமைப்பினை மேம்படுத்துகிறது. சாகுபடியின் மூலம் 400-500 கிலோ/ஹெக்டர் காய்ந்த சருகுகளுடன் 2.5% தலைச்சத்து மற்றும் 10-12 கிலோ/ஹெக்டர் தலைச்சத்துக்களை கொடுக்கிறது.
இதன் மூலம் கூடுதல் நன்மைகளாக களைக் கட்டுப்பாடு,மண் அரிப்பினை தடுத்தல்,மற்றும் பருத்தியின் நோய்களுக்கு இயற்கையான பாதுகாப்பினை ஏற்படுத்துதல் ஆகியன பெறப்படுகிறது.
இ) தக்கை பூண்டு
தக்கை பூண்டு பார்வை பருத்தி தோட்டத்தை சுற்றிலும் இரண்டு மீட்டர் அகலத்தில் வளர்ந்து நட்ட 65-70 நாட்களில் அறுவடை செய்து பருத்தி செடியின் வரிசைகளுக்கு இடையே பரப்பும் பொழுது இது பயிர் தண்டு வளர்ச்சிக்கு தேவையான தலைச் சத்தினை அளிக்கிறது.மேலும் தண்டுகள் விரைவில் மக்க கூடியவை.மேலும் மண்ணின் ஈரப்பதம் அழிவதையும் தடுக்கிறது.
ஈ) மண்புழு உரம்
தொழுவுரத்துக்கு மாற்றாக மண்புழு உரத்தினை 1.2 டன் /ஹெக்டர் என்ற அளவில் நடவு வரிசைகளின் போட்டு நடவு செய்ய வேண்டும். மண்புழு உரம் பல்வேறு நுண்ணூட்டங்களுக்கு அடித்தளமானது. மேலும் இது பயிர் வளர்ச்சிக்கு தேவையான மைக்ரோ புளோரா என்னும் அமிலத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மண்ணின் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் ஏதுவாக அமைகிறது.
உ) உயிர் உரங்கள்
நடவின் பொழுது விதைகளை அசிட்டோ பாக்டர் அல்லது அசோஸ்பியரில்லம் 200 கிராம் / ஏக்கர் என்ற அளவில் கலந்து விதைக்க பரிந்துரைக்கப்படுகிறது.