குமிழ் மரக் கன்றுகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்...
தோட்ட பராமரிப்பு
குமிழ்மரக்கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு 15செ.மீ ஆழம் வரை மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும்.
செடிகள் நன்குவளர மாதம் இருமுறை நீர் விடுவது அவசியமாகும். ஆறுமாதத்திற்கு ஒருமுறை தொழுஉரம் இட்டு செடிகளை சுற்றி கொத்தி களை எடுப்பதன் மூலம் செடிகள் நன்கு வளரும்.
இவ்வாறு தொடர்ந்து தோட்டம் உற்பத்தி செய்த ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் வரை பராமரிப்பு பணி மேற்கொண்டால் குமிழ்கன்றுகள் நன்கு வளர்ந்து மரமாகும்.
வேளாண்காடு வளர்ப்பு :
குமிழ் மரத்தோட்டத்தில் வேளாண் பயிர்களான சோளம், பருத்தி, நிலக்கடலை, மஞ்சள், உளுந்து, தட்டைபயிறு, கொள்ளு மற்றும் காய்கறிகள் போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னை மற்றும் வாழை போன்றவைகளையும் ஊடுபயிராக பயிரிடலாம்.
மகசூல் சேகரம் மற்றும் வருவாய் :
குமிழ்மரத் தோட்டத்தை நன்கு பராமரிக்கும் பட்சத்தில் மரங்கள்ச சிறப்பாக வளர்ந்து பத்தாண்டு காலத்தில் சுமார் 120 செ.மீ சுற்றளவுடன் 15மீ உயரம் வரை வளர்கிறது.
ஒரு ஏக்கரில் 160 குமிழ்மரங்களின் மூலம் கிடைக்கும். மகசூல் 0.33 மெ.டன் / 1 மரம் 52.80 மெ.டன். வருவாய் 52.80 மெ.டன் @ ரூ.9200/- மெ.டன் – ரூ 4,85,760.00 சராசரியாக ஓராண்டு வருவாய் – ரூ 48,576.00