குறுவை சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள்

ஆடுதுறை 37:

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த இரகம் குட்டையான சாயாத தன்மையைக் கொண்டது.

சொர்ணவாரி, கார், குறுவை, நவரைப் பட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் பயிர் செய்ய ஏற்ற இந்த இரகம் எக்டருக்கு 6-6.5 டன்கள் வரை விளைச்சல் தரவல்ல இந்த இரகத்தின் நெல் கதிரில் அதிக எண்ணிக்கையில் (200-250) நெல் மணிகள் இருக்கும்.

நெல் மணிகள் குட்டை பருமன், வெள்ளை அரிசி உடையவை. பல பூச்சிகளுக்கும், நோய்களுக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டவை. குறிப்பாக மஞ்சள் இலைநோய் இந்த இரகத்தில் தோன்றுவதில்லை.

ஆடுதுறை 43:

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1998-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம். ஐஆர் 50 மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி ஆகியவற்றின் இனக்கலப்பு முறையில் உருவாக்கப்பட்டது.

குட்டையான தன்மை கொண்ட சாயாத தன்மை கொண்ட இந்த இரகம் 105-110 நாள்கள் வயதுடையது. குறுவை, சொர்ணவாரிப் பட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் (கன்னியாகுமரி, தூத்துக்குடி தவிர) பயிர் செய்யலாம்.

எக்டருக்கு 5.9 டன்கள் வரை விளைச்சலைத் தரவல்லது. மிகச் சின்ன வெள்ளை அரிசி, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னியைக் காட்டிலும் சின்னமானது. இந்த இரகம் தமிழ்நாடு முழுவதும் ஆடுதுறை 36 நெல்லுக்குப் பிறகு அதிக பரப்பளவில் பயிர் செய்யப்படும் இரகம. பச்சைத் தத்துப்பூச்சி எதிர்ப்பு திறனைக் கொண்டது.