மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் தளிர் இலைகளையும், புற்களையும் ஆடுகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறு ஏற்படும்.

இது தவிர மிகவும் அரைத்து வைத்த தானியங்களை சாப்பிட கொடுக்கும் போதும், விரயமான காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் செரிமான கோளாறு ஏற்படும்.

வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது இவ்வாறு நேர்வதுண்டு.

பாதிக்கப்பட்ட அறிகுறிகள்

வயிறு உப்புசம் ஏற்படும்.

ஆடுகள் உறக்கமின்றி காணப்படும்.

பல்லை அடிக்கடி கடித்துக் கொள்ளும்.

பாதிக்கப்பட்ட ஆடுகள் நிற்கும் பொழுது கால்களை மாறி  மாறி வைத்துக் கொள்ளும்.

இடது பக்க வயிறு, வலது பக்கத்தை விட பெருத்து இருக்கும்.

உப்புசத்தால் மூச்சு திணறும். வாயினால் மூச்சு விடும். நாக்கை வெளியில் தள்ளும்.

தலையையும், கழுத்தையும் முன்னோக்கி வைத்துக் கொள்ளும்.

வயிறு உப்புசத்தை சமாளிக்கும் முறைகள்

அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை மேற்கொள்ளவும். இல்லாது போனால் நீங்களே முதல் உதவியாக 50 முதல் 100 மிலி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை வாய் வழியாக கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் போது புரை ஏறாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

தடுப்பு முறைகள்:

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் அதிக நேரம் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தீவனத்துடன் நொதிக்க கூடிய மாவுப்பொருட்களை சேர்க்க கூடாது.

போதுமான அளவு காய்ந்த புல் தர வேண்டும்.