Asianet News TamilAsianet News Tamil

மல்பெரிச் செடியை தாக்கும் முக்கியமான பூச்சிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை…

Important insects that attack the mulberry plant and their management ...
important insects-that-attack-the-mulberry-plant-and-th
Author
First Published May 16, 2017, 11:54 AM IST


மல்பெரிச் செடியை பலவகை பூச்சிகள் தாக்கி பலத்த சேதத்தை விளைவிக்கின்றன.  அவற்றுள் முக்கியமான பூச்சிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை இதோ.

1.. இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி:

இந்நோய் கோடைப்பருவத்தில் அதிகமாகக் காணப்படும். குஞ்சுகளும் வளர்ந்த பூச்சிகளும் செடியின் இளந்தளிர் மற்றும் குருத்துத் தண்டுப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் உண்டாக்கும்.

பாதிக்கப்பட்ட செடியின் தளிர்ப்பகுதிகள் அடர் பச்சை நிறத்தில் சுருண்டும் தெளிந்தும் காணப்படும்.

இரண்டு கணுக்களுக்கிடைப்பட்ட இடைவெளி மிகவும் குறைந்து, செடிகளின் குட்டையான வளர்ச்சியுடன் இருக்கும். இலைகளின் தரம் குறைந்துவிடும்.

மேலாண்மை

பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி சேகரித்து எரித்துவிடவேண்டும்.

மீன் எண்ணெய் (FORS) 40 கிராம்/லிட்டர் அல்லது டைகுலோரோவோஸ் 76 WSC  2 மிலி/லிட்டர், (காத்திருப்பு கால இடைவெளி 15 நாட்கள்)

இரை விழுங்கிகளான கிரிப்டோலிமஸ் 750 பொறிவண்டு/எக்டர் (அ) ஸ்கிம்னஸ் 1000 பொறிவண்டு/எக்டர் என்ற அளவில் வெளியிடவேண்டும்.

2...  பப்பாளி மாவுப்பூச்சி:

இப்பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிறப் பொருளால் கவரப்பட்டிருப்பதால் இதனை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.

இலையின் அடிப்பகுதி குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.

சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.

பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன்மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும் அதிக தாக்குதலில் செடிகள் இலைகள் வாடி கருகிவிடும்.

இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச்செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்கவும்.

மேலாண்மை

அசெரோபேகஸ் பப்பாயே @ 500 ஒட்டுண்ணிகளை / கிராமத்தில் அல்லது தொகுதியில் வெளியிடவும்.

பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, இயற்கையில் வயலில் காணப்படும் ஸ்பால்ஜியஸ் மற்றும் காக்ஸிநெல்லிட்ஸ் போன்ற ஊனுண்ணிகளை பாதுகாக்கவும்.

களைகளை அகற்றி வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.

வயலில் மிகஅதிக மாவுப்பூச்சி தாக்குதல் உள்ள தருணத்தில் ஒட்டுண்ணிகளை வயலில் விடவும்.

3. இலைப்பிணைக்கும் புழு:

குளிர் காலங்களில் இப்புழுவின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இப்புழுக்கள் மல்பெரி செடியின் இலைகளைப் பிணைத்து, உண்கின்றன.

இதன் தாக்குதலால் செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.

மேலாண்மை

பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதிகளை கிள்ளி எடுத்து அழித்துவிடவேண்டும்.

விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

டைகுளோர்வாஸ் என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

4. இலைப்பேன்:

இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலையில் உள்ள பச்சையத்தை சுரண்டி, சாற்றை உறிஞ்சுதலால் இலைகள் சுருண்டு, பளபளப்பான பழுப்பு திட்டுக்களுடன் காணப்படும்.

இப்பூச்சியின் தாக்குதல் கோடைக்காலத்தில் அதிகமாகக் காணப்படும்.

மேலாண்மை

டைகுளோர்வாஸ் 76 WSC  என்ற மருந்தினை 2  மில்லி/ லிட்டர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

5. கரையான்:

இதன் தாக்கம் மணற்பாங்கான நிலங்களில் அதிகம்.

இப்பூச்சியானது இளம் மற்றும் செடியின் வேர் மற்றும் பாகங்களைத் தாக்குகின்றன.

தாக்குதல் அதிகமாகும் போது செடிகள் இறந்துவிடுகின்றன.

மேலாண்மை

கரையான் புற்றுக்களை அழித்தல்.

குளோர்பைரிபாஸ் 20 EC 50  மில்லி என்றளவில் கரையான் உள்ள இடங்களில் தெளித்தல் அல்லது பாத்தி அமைத்து இடவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios