Asianet News TamilAsianet News Tamil

மாமரத்தில் பூ உதிர்வை தடுத்து பூக்களை பாதுகாக்க இதோ சில வழிகள்…

How to protect flowers in mango tree
How to protect flowers in mango tree
Author
First Published Aug 9, 2017, 1:04 PM IST


 

மா மரங்களில் பூக்களைப் பூக்க வைப்பதும் மற்றும் அவற்றை உதிர்ந்து போகாமல் பாதுகாப்பதும் கடினமான காரியம். பூக்கும் அணைத்துப் பூக்களும் காயாக மாறுவதில்லை.

பொதுவாகவே மாமரங்களில் பூக்கள் உதிர்வு அதிகமாக இருக்கும். சரியான பராமரிப்பு இல்லையென்றால் பூக்கள் உதிர்வு அதிகமாக இருக்கும்.

மா மரங்கள் நவம்பர் கடைசியில் ஆரம்பித்து ஜனவரி இறுதி வரை பூக்கள் பூக்கின்றன. முதலில் பூக்க ஆரம்பிப்பது செந்தூர ரக மாமரங்கள், கடைசியில் பூப்பது நீலம் மாம்பழம் வகைகள்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் செந்தூரா அடுத்து இமாம் பசந்த், ரஸால், அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா ஆகிய ரகங்கள் பூக்கள் பூக்கும்.

மாம்பூக்கல் இயற்கையாகவே உதிராமல் இருந்தால் 1% தான் மரங்களில் நிற்கும். ஏதேனும் பிரச்சினை அல்லது சத்து குறைபாடு இருந்தால் அதற்கும் குறைவான பூக்கள் மட்டுமே பிஞ்சுகளாகும். இதனால் மகசூல் பெருமளவில் குறையும். அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனபள்ளி போன்ற ரகங்களில் 1% விட குறைவான பூக்கள்தான் பிஞ்சுகளாகும்.

பூக்கும் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறாது, இயற்கையாகவே மரங்கள் எவ்வளவு பழங்களை தாங்குமோ அந்த அளவுக்கு தான் காய்கள் நிற்கும்.

மா மரங்களில் பூக்களை அதிகம் தாக்குவது தத்துப்பூச்சிகள் மற்றும் சூட்டிமோல்ட் என்ற சாம்பல் நோய். கற்பூரகரைசல் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் முதல் தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சி தாக்குதல்களை முற்றிலும் தடுக்கலாம். கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தெளிப்பதால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும்.

இயற்கை உரங்களான, அரப்பு மோர் கரைசல் மற்றும் தேங்காய் பால் மோர் கரைசல் மாம்பூக்களின் மேல் தெளித்தால் அதிக அளவிலான பூக்கள்  பிஞ்சுகளாக மாறும்.

பூக்கள் பூக்க ஆரம்பித்த பிறகு மரங்களின் வேரில் மேம்படுத்தப்பட ஜீவாமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் தண்ணீரில் கலந்து விடுவதால் பழங்களின் அளவு மற்றும் சுவை அதிகமாக இருக்கும்.

மாமரங்கள் பூ எடுத்து கோலி குண்டு அளவு பிஞ்சு வந்த பின்புதான் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios