கறவை மாடுகளுக்கான கலப்பு தீவனத்தை எப்படி தயாரிக்கணும்? வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

How to prepare a mixed feed for dairy cows
How to prepare a mixed feed for dairy cows


கறவை மாடுகளுக்கான கலப்பு தீவனம் 

கலப்பினப் பசுக்கள் நல்ல பால் உற்பத்தித்திறனைக் கொண்டிருந்தாலும் அவற்றின் முழுத்திறனும் வெளிப்பட உரிய தீவனம் அவற்றிற்கு கொடுக்கப்பட வேண்டும்.

பால் உற்பத்திக்கு ஆகும் செலவில் 60 முதல் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாவதால் லாபத்தை அதிகரிக்க தீவன மேலாண்மை மிகவும் அவசியம்.

மூலப் பொருட்களை தேர்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

** குறைந்த பட்சம் 2 அல்லது 3 மாவுப் பொருட்களைச் சேர்ப்பது நல்லது.

** மிகவும் பழையப் மூலப் பொருட்களையோ அல்லது பூஞ்சை காளானால் பாதிக்கப்பட்ட மூலப் பொருட்களையோ சேர்க்ககூடாது.

** அரைப்பதற்கு முன் மூலப் பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து அப்பொருட்களில் மணல் மற்றும் கற்கள் கலப்பிடம் ஏதேனும் இருந்தால் நீக்க வேண்டும்

மூலப்பொருட்கள்:

** மக்காசோளம் - 12 கிலோ 

** அரிசி - 15 கிலோ 

** தேங்காய் புண்ணாக்கு - 15 கிலோ 

** பருத்திகொட்டை புண்ணாக்கு - 18 கிலோ 

** தவிடு - 36 கிலோ 

** சமையல் உப்பு - 2 கிலோ 

** தாது உப்பு - 1 கிலோ 

** யூரியா - 1 கிலோ 

** மொத்தம் - 100 கிலோ 

தயாரிப்பு முறை

முதலில் மிக குறைந்த அளவே உள்ள தாது உப்பு, யூரியா மற்றும் சமையல் உப்பு ஆகியவற்றை குறைவான அளவுள்ள ஏதேனும் ஒரு தீவன மூலப் பொருளில் நன்கு கலந்த பிறகு , இதை பிற மூலப் பொருட்களுடன் கலந்து கொள்ளவும்.

கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் அளிக்கும் முறை

ஐந்து லிட்டர் வரை பால் கொடுக்கும் கறவைப் பசுக்களுக்கு பசுந்தீவனம் மட்டுமே கொடுத்துப் பராமரிக்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios