Asianet News TamilAsianet News Tamil

கால்நடைகளுக்கு மர மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை எப்படி கொடுக்கணும்?

How to give these feeds to livestock
How to give these feeds to livestock
Author
First Published Mar 3, 2018, 1:46 PM IST


 

1.. மர வகை

அகத்தி,  சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல், ஆச்சா மற்றும் வேம்பு, நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.

அளிக்கும் முறை

பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை 1 பங்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவு சத்துகள் சரியான விகிதத்தில் கிடைக்கும்.

2.. தீவன தட்டை பயிறு - Fodder Cowpea

புரத சத்து அதிகமுள்ள தீவன பயிர், 

30 - 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.

இலைகள் உதிரும் அளவு மிகவும் குறைவு.

உலர் தீவனம் தயாரிக்க உகந்தது.

ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.

பசுந்தீவனமளிக்கும் முறை

கறவை மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 15-25 கிலோ பசுந்தீவனம் அளிக்கலாம். அதில் மூன்றில் இரண்டு பங்கு தானிய மற்றும் புல்வகை பசுந்தீவனமாகவும் மீதமுள்ள ஒரு பங்கு பயறு வகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும்.

பசுந்தீவங்களை 2 அங்குல அளவிற்கு துண்டுகளாக நறுக்கிப் போடுவது சிறந்தது. துண்டுகளின் அளவு 2 அங்குலத்திற்கு கீழ் குறைந்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும்.

Follow Us:
Download App:
  • android
  • ios