Asianet News TamilAsianet News Tamil

மஞ்சள் சாகுபடியில் ஆவூட்டம் செய்வது எப்படி?

How to get rid of yellow cultivation?...
How to get rid of yellow cultivation?...
Author
First Published Apr 4, 2018, 2:39 PM IST


மஞ்சள் சாகுபடியில் ஆவூட்டம்: (ஆ – பசு, ஊட்டம்)

உடனடி வளர்ச்சி ஊக்கியில் அவ்வளவு பயன் கிடைக்காவிடில் பின்வரும் ஆவூட்டம் என்ற கலவையைப் பயன்படுத்தலாம்.மாட்டுச் சாணம் – 5 கிலோமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர்(இவற்றை மண்பாளை அல்லது வாளியில் 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 

இத்துடன் தனியாக 2 லிட்டர் தயிரை 15 நாள் புளிக்கவிட வேண்டும். 16 ஆம் நாளில் மேலே கூறிய இரண்டு கரைசலையும் சேர்த்து பின்வரும் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.)* பால் – 2 லிட்டர்நெய் – 1/2 முதல் 1 லிட்டர்பனைவெல்லம் – 1 கிலோ (அல்லது நாட்டுச் சர்க்கரை)இளநீர் – 3-4 எண்ணம்இவற்றை எல்லாம் நன்கு கலந்து 1 வாரம் மண்பாணையில் ஊற வைக்க வேண்டும். 

தினமும் மாலை 3 நிமிடங்கள் வரை கலக்கிவிட்டு வர வேண்டும். இதுவே ஆவூட்டக் கரைசல் இதை ஆறு மாதம்வரைப் பயன்படுத்தலாம். மஞ்சள் பயிருக்கு 1 லிட்டருடன் 10 லிட்டர் நீர் சேர்த்து இலைகளில் நன்கு படும்படியாக தெளிப்பான் மூலம் அடிக்க வேண்டும்.மஞ்சளில் சாம்பல் சத்து குறைவாக இருந்தால் முதிர்ந்த இலைகளின் ஓரம் கருகத் தொடங்கி இருக்கும். 

விரலி ஓட்டத்திற்கும் நல்ல திரட்சியான மஞ்சளுக்கும் சாம்பல் சத்து மிக அவசியம். இதைச் சரிசெய்ய தோட்டத்தின் வெளியில் உள்ள களைகளைச் சேகரித்து வந்து உலர வைத்து தனியான இடத்தில் தீயிட்டுச் சாம்பல் செய்ய வேண்டும். இந்தச் சாம்பலை ஏக்கருக்கு 50-100 கிலா என்ற கணக்கில் மண் அணைக்கும்போது போட வேண்டும். 

அல்லது உமி சாம்பல் 500 கிலோ பயன்படுத்தலாம்வேர்மூலம் பரவும் நோய்களான கிழங்கு அழுகல்நோயைக் கட்டுப்படுத்தவும் வேரைத் தாக்கும் நூற்புழுவைக் கட்டுப்படுத்தவும் 

கீழ்க்கண்ட கரைசலைப் பயன்படத்தலாம்.சாணஎரிவாயுக் கிடங்கில் இருந்து கிடைத்த சாணக்கழிவு – 50 லிட்டர்ஆவூட்டம் – 5-10 லிட்டர்சூடோமோனஸ் புளோரசன்ஸ்டிவிரிடி 500 கிராம்ர்பைசிலோமைசிஸ்நீர் – 100-200 லிட்டஇவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். 

ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும். முதல் 4 மாதங்களு’குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.

இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்போன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.

இவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும். 

முதல் 4 மாதங்களுக்குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்போன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios