ஆடுகளின் வயதை பார்த்தவுடனே கண்டுபிடிப்பது எப்படி?
ஆடுகளின் வயதைக் கண்டுபிடிக்கும் முறை...
பொதுவாகப் பல் வரிசையைக் கொண்டு ஆடுகளின் வயதை நிர்ணயம் செய்யலாம். பற்களில் தற்காலிகப்பற்கள், நிரந்தரப் பற்கள், பால் பற்கள் எனப் பலவகை உண்டு. ஆடுகளில் மேல் தாடையில் பற்கள் காணப்படுவதில்லை.
எனவே கீழ்த்தாடைக் பற்களின் எண்ணிக்கையை வைத்து வயதைக் கணிக்கலாம். கீழ்க்கண்ட அட்டவணை ஆடுகளின் வயதை பற்களின் எண்ணிக்கையை வைத்து அறிய உதவும்.
வயது பற்களின் அமைப்பும், எண்ணிக்கையும்
** பிறந்தவுடன் 0-2 ஜோடி பால் பற்கள்
** 6-10 மாதம் கீழ்த்தாடையின் முன்புறம் 8 முன்பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
** ஒன்றரை வயது நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்.
** இரண்டரை வயது நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
** மூன்றரை வயது ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
** நான்கு வயது எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
** ஆடுகளுக்கு 6-7 வயது பற்கள் விழுந்துவிடும்