வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு முறையை எப்படி மேற்கொள்ளணும்?
வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு முறை
நெல், வாழை, தென்னை போன்ற வேளாண் பயிர்களுடன் சேர்த்து மீன் வளர்ப்பது இரட்டிப்பு பலன் தரும்.
நெல் வயலில் மீன் வளர்ப்பு
இந்தியாவில் 6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் பயிர் செய்யப்பட்டாலும், 0.03% மட்டுமே நெல் - மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. இம்முறையில் பல நன்மைகள் காணப்படுகின்றன.
அவை
** குறைந்தளவு நிலத்திலும் அதிக பொருளாதாரப் பயன்பாடு.
** அதிக ஆட்கூலி தேவைப்படுவதில்லை.
** களையெடுப்பு மற்றும் மீன்களுக்கு உணவளித்தல் போன்ற செயல்களுக்கான ஆட்கூலி தேவை மிச்சமாகும்.
** அதிக நெல் விளைச்சல்.
** விவசாயிக்கு வயலிலிருந்து நெல், மீன் மற்றும் வயல்வெளி ஓரங்களில் வெங்காயம், பீன்ஸ், போன்றவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே நமது நாட்டில் நெல்வயலில் மீன் வளர்க்கும் முறையை அதிகப்படுத்துதல் வேண்டும்
** நெல் வயலில் 3 - 8 மாதங்கள் வரை நீர் தேங்கி இருக்கும். நெற்பயிர் அறுவடை முடிந்தபின் மீதமிருக்கும் நீரில் உள்ள மீன்கள் பயிரில்லாத காலத்தில் விவசாயிக்குக் கூடுதல் இலாபம் அளிக்கும். இதற்கு வயலில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
** வட்டவடிவ குழிகள் தோண்டி கரைகள் கட்ட வேண்டும். குளம் போன்று உருவாக்கியபின் அதில் ஹெக்டருக்கு 10000 வரை மீன்குஞ்சுகளை விட வேண்டும். அவற்றிற்கு உணவாக அரிசி - உமி புண்ணாக்குகள் 2 - 3% உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்கலாம்.
** இவ்வாறு மீன் வளர்ப்பிற்கு ஏற்றவாறு பனிதன், துளசி, சி.ஆர் 260 77, ஏ.டி.ட்டி - 6,7, ராஜராஜன் மற்றும் பட்டம்பி 15,16 போன்ற நெல் இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இரகங்கள் நீர்த்தேக்கத்திலும் நன்கு வளரக் கூடியவை.
** அதோடு இதன் வாழ்நாள் 180 நாள் வரை இருப்பதால் மீன்வளர்ப்பை நாற்று நட்டபின் ஆரம்பிக்கச் சரியான தருணமாகும். மீன்கள் விற்பனைக்கு உகந்த அளவு எடைக்கு வந்த பின்பு அறுவடை செய்து விற்றுவிடலாம்.