மல்பெரி செடியில் வேகமான வளர்ச்சி காண இந்தமுறைப்படி சாகுபடி செய்யுங்கள்…

How to cultivate malberry fast
How to cultivate malberry fast


 

மல்பெரி செடிகள் இல்லை என்றால் பட்டு வஸ்திரம் இல்லை. பட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது மல்பெரி செடிகள்.

பட்டு நமது பாரம்பரியத்தில் மதிப்புடைய பொருளாக பார்க்கப்படுகிறது. நமது அணைத்து வகையான விழாக்களிலும் பட்டு முதன்மை வகிக்கிறது.

அதிகம் தண்ணீர் தேவைப்படாத மிதமான வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையது மல்பரி. நடவு செய்யும்பொழுது 3*3 அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

மல்பரி குச்சிகளை நேரடியாக நிலத்தில் நடவு செய்தால் துளிர்த்துவிடும். அல்லது பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் கப் போன்ற வற்றிலும் குச்சிகளை வளர்ந்து பிறகு நிலத்தில் நடவு செய்யலாம்.

மல்பரி இழை ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றிற்கு தீவனமாக பயன்படுகிறது. இதில் கால்சியம் சத்து மிகுந்த காணப்படுகிறது.

மல்பரி அதிகமாக தாக்குவது மாவுப்பூச்சி. கற்பூரகரைசல் வாரம் ஒரு முறை தொடர்ந்து தெளிப்பதனால் மாவுப்பூச்சியை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.

மண்புழு உரம் தொடர்ந்து இடுவது மூலம் மல்பரியில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். மீன் அமிலம் தெளிப்பு மற்றும் மண்ணில் இடுவதின் மூலம் அபரிமிதமான வளர்ச்சியை காணலாம்.

மல்பரிக்கு பயிருக்கு நுன்னூட்ட சத்துக்கள் அதிகமாக தேவைபடும். முழுவதும் இயற்கை முறையில் பயிறிட, மேம்படுத்தப்பட அமிர்த கரைசலை  தண்ணீர் பாயும் போது தொடர்ந்து அளிப்பதன் மூலம் மிக வேகமான வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios